மேயர் ஆக கட்சி மாறவில்லை - சாருபாலா விளக்கம்

பேட்டி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே, அ.தி.மு.க-வில் சாருபாலா தொண்டைமான் இணைந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. ஐந்து மாதங்கள் கழித்து, சாருபாலா தொண்டைமான் முதல்வர் ஜெயலலதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்து அதை உறுதிப்படுத்தியுள்ளார். 2001-ல் இருந்து 2009 வரை திருச்சி மேயராக இருந்தவர் சாருபாலா தொண்டைமான், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து வந்தபோது, அவரது தலைமையை ஏற்று சாருபாலா தொண்டைமானும் த.மா.கா-வில் இணைந்தார். சாருபாலாவிடம் பேசினோம்.

‘‘த.மா.க-வில் இருந்து திடீரென்று பிரிந்து அ.தி.மு.க-வில் இணையக் காரணம் என்ன?’’

‘‘நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இருந்தே சில விரும்பதாக நிகழ்வுகள் த.மா.கா-வில் நடந்து வந்தன. தேர்தலில் சரியான கூட்டணி இல்லை. மக்கள் நலக் கூட்டணி வேண்டாம் என்று கூறினோம். கேட்கவில்லை. தேர்தல் முடிந்த பிறகும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. எனவே ஒரு மாதத்துக்கு முன்னதாகவே நான் கட்சியில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தைக் கொடுத்துவிட்டேன். கட்சியில் இருந்து ஏன் விலகுகிறேன் என்பதைத் தெளிவாக அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளேன்.’’

‘‘த.மா.கா-வில் என்ன நடக்கிறது ஏன் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள்?’’

‘‘ஜி.கே.வாசன் நல்லவர். ஆனால், அரசியலில் வல்லவராக இல்லை. அந்தக் கட்சியின் மீதான விமர்சனத்தை விரிவாக நான்  வைக்க விரும்ப​வில்லை. பிடிக்கவில்லை வெளியேறிவிட்டேன். 30 வருடங்களாக நான் அந்தக் கட்சியில் இருந்திருக்​கிறேன். எனவே, குறை கூறவிரும்பவில்லை. அந்தக் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று தெரிந்து​கொண்டேன். அதனால், வெளியேறி​விட்டேன்.’’

‘‘உள்ளாட்சித் தேர்தலையும் மேயர் பதவியும் மையமாக வைத்தே இணைந்ததாகக் கூறப்​படுகிறதே?’’

‘‘அப்படியான எண்ணத்தில் நான் இணையவி​ல்லை. ஆனால், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்துள்ளார்கள். கிட்டதட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இடங்கங்கள் பெண்களுக்கு வருகிறது. இவற்றை சரித்திர சாதனையாகப் பார்க்கிறோம்.  பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் விஷயத்தில் அம்மா அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். நான் மேயர் பதவியை வைத்து அ.தி.மு.க-வில் இணையவில்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன்.’’

‘‘அ.தி.மு.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சசிகலா புஷ்பா அந்தக் கட்சியின் மீது ஏராளமான குற்றச்சாட்டை வைத்துவிட்டு வெளியேறியுள்ளார்கள். எந்த நம்பிக்கையில் அந்தக் கட்சியில் இணைந்தீர்கள்?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்