‘‘ஆசிட் அடிச்சவங்களோட கூட்டணி சேர்ந்துட்டாரு’’

கே.கே.எஸ்.எஸ்.ஆர். மகன் பொளேர்!பேட்டி

ல்வேறு கட்சியில் இருந்து 91,308 பேர் அ.தி.மு.க-வில் இணைந்த விழாவில் உற்சாக​மாக இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வில் இணைந்தவர்களில் கவனிக்கப்பட வேண்டியவர்களில் ஒருவர் தி.மு.க முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மகன் ரமேஷ். அவரிடம் பேசினோம்.

‘‘அ.தி.மு.க-வில் ஐக்கியமானதற்கு என்ன காரணம்?’’

‘‘தி.மு.க தலைமை உருப்படியா இல்லை. 1999-ம் ஆண்டு, அப்பா அ.தி.மு.க-வுல இருந்து தி.மு.க-வுக்குப் போனார். அன்னைல இருந்து நாங்களும் கொடி புடிச்சுகிட்டுத்தான் சுத்திக்கிட்டு இருக்கோம். இவங்க அறிவிச்ச எல்லா போராட்டங்கள்லயும் கலந்துகிட்டு களப்பணி செஞ்சுட்டுதான் இருந்தோம். இடைத்தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்னு எல்லா தேர்தல்லயும் வேலை பார்த்தோம். ஆனா, எனக்கும் என்னை மாதிரி கஷ்டப்பட்டவர்களுக்கும் கட்சி எந்த முக்கியத்துவமும் கொடுக்கலை. நானாவது கே.கே.எஸ்.எஸ்.ஆர். பையன், மாவட்டச் செயலாளர் பையன்னு ஓரளவு முக்கியத்துவத்தோட இருந்தேன். ஆனா, மத்தவங்க என்ன பண்ணுவாங்க? அவங்க உழைச்ச உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கொடுக்கணுமில்லையா? அங்கீகாரம் கொடுக்காம, சுயநல வட்டத்தை வைச்சுட்டு, அந்த வட்டத்துல இருக்கறவங்களுக்குத்​தான் பதவின்னா என்ன அர்த்தம்? உழைச்சு உழைச்சு ஓடாய் போனவர்களுக்குப் பதவி கிடைக்கவில்லை. உழைக்காதவர்களுக்கு எல்லாம் மாவட்ட அளவு பொறுப்பு கொடுத்தார்கள்.  அதனால அ.தி.மு.க-வுல இணைஞ்சுட்டோம்.

அ.தி.மு.க-வுல அம்மாதான் தலைமை. தப்பு செஞ்சா தண்டனை உண்டு. உண்மையா உழைச்சா மரியாதை உண்டு. கடைக்கோடி தொண்டன் உழைச்சா, அவனை எங்கு போய் வைக்கணும்னு அவங்களுக்குத் தெரியும். உழைப்புக்கு ஏத்த மரியாதை இருக்கும். அதனால இங்கே வந்துட்டோம்.’’

‘‘அப்பா கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும், உங்களுக்கும் என்னதான் பிரச்னை?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்