“இந்தப் போராட்டம் போதாது... ஜெய் கர்நாடகா!"

பிஞ்சு மனங்களில் நஞ்சு...வன்முறை

செப்டம்பர் 13-ம் தேதி...

காலை 7 மணி...


பெங்களூரில் நாளிதழ் ஒன்றில் பணியாற்றும் நண்பர் ஒருவரிடம் இருந்து நமக்கு செல்போன் அழைப்பு...

“நண்பா... இங்கு நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. பெங்களூர்ல வாகன நெரிசலால் சிக்கித்தவிக்கும் பரபரப்பான சாலைகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கு. எங்குமே ஆட்டோக்கள் ஓடல. ஒன்னு ரெண்டு பைக்குதான் ரோட்டுல ஓடுது. ஐ.டி கம்பெனிகள் முன்னாடி போலீஸையும், பாரா மிலிட்டரி படையையும் குவிச்சிருக்காங்க. எப்பவுமே ஜே ஜேன்னு இருக்கும் விஜயா நகர்ல ஒரே மரண அமைதி. தமிழர்கள் யாரும் வெளியே தலைகாட்டல. வீட்டுகுள்ளளே முடங்கிக் கிடக்குறாங்க. தமிழ் பேசுறதையும் நிறுத்திட்டாங்க. தமிழர் பகுதிகள்ல ஏராளமான போலீஸை குவிச்சிருக்காங்க. கேபிள் கட் பண்ணிட்​டாங்க. தெருவுல ஒரு கடை கூட இல்ல...” என்று பதற்றத்துடன் பேசினார். பெங்களூரில் 12-ம் தேதி வெடித்த கலவரம், அங்கு வாழும் தமிழர்களைப் பெரும் அச்சத்தில் தள்ளியிருக்​கிறது என்பது அந்த நண்பரின் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.

பெங்களூரு நகரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை, அங்குள்ள பத்திரிகையாளர்கள் வாட்ஸ்அப் மூலமாக நமக்கு உடனுக்குடன் அனுப்பிக்கொண்டே இருந்தனர். நாமும் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம்.

நாம் தொடர்புகொண்ட பத்திரிகையாளர் ஒரு தமிழர். பெங்களூரில் கலவரம் நடந்த பல இடங்களுக்கும் நேரில் சென்று பார்த்தவர் அவர். அந்தக் காட்சிகளை நம்மிடம் படபடப்புடன் விவரித்தார்.

“நேத்து (12-ம் தேதி) கோர்ட் தீர்ப்பு வந்ததுமே கலவரம் ஆரம்பிச்சுடுச்சி. மதியம் ரெண்டு மணிக்கெல்லாம் தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன் வாகனங்களைத் தாக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்க சித்தி பையன் டவுன் ஹால்ல உள்ள ஒரு ஸ்கூல்ல படிக்கிறான். உங்கப் பையனை வந்து உடனே கூட்டிட்டுப் போங்கனு ஸ்கூல்ல இருந்து ஃபோன் பண்ணாங்க. ‘உடனே தம்பியை அழைச்சிட்டு வாப்பா’ன்னு எங்க சித்தி எனக்கு ஃபோன் பண்ணாங்க. நானும் என் ஃப்ரெண்ட் ஒருத்தரும் அந்த ஸ்கூலுக்கு பைக்ல போனோம்.

காந்தி பஜார்கிட்ட போய்கிட்டு இருந்தப்போ, அங்க இருக்கிற சின்னப் பாலத்துல ஒரு லாரி ஏறிகிட்டு இருந்துச்சி. அந்த லாரியை பத்து பைக்ல கன்னட பசங்க விரட்டிட்டுப் போனாங்க. அது, தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன் லாரி. அந்த லாரியைப் பாலத்து மேலயே மடக்கி நிறுத்தினாங்க. டிரைவரை இறக்கி ஓரமா தள்ளிவிட்டாங்க. அப்புறம், லாரியை அடிச்சு உடைச்சு  தீ வெச்சு கொளுத்திட்​டாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்