தமிழ்த்தேச அரசியல் போராட்டம்

பொழிலன்விமர்சனம்

மிழ்நாட்டை தமிழ்த்தேசம் என்று வரையறுக்கிறது தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி. தமிழகம் அரசியல், சமூகம், பொருளாதார வழியாக எப்படி எல்லாம் அடிமைப்பட்டு உள்ளது அதனுடைய முன்னேற்றத்தை அடையும் அரசியல் நடவடிக்கை களைக் கொண்டதாக அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. அக்கட்சி தொடங்கப்பட்ட காலச் சூழலையும் அதன் செயல்பாடுகளில் முன்னெடுத்த அரசியலையும் தொகுத்துச் சொல்லும் முக்கியமான வரலாற்றுத் தொகுப்பு இது. இதனை பொழிலன் எழுதி இருப்பது கவனிக்கத்தக்கது. அந்த அமைப்பின் தத்துவார்த்த செயல்பாடுகளிலும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்த பொழிலன் மூலமாக இந்த வரலாற்றுப் பதிவு கிடைத்துள்ளது.

1984-ம் ஆண்டு வெளி யிடப்பட்ட தமிழக பொதுவுடைமைக் கட்சி மா-லெ. வெளியிட்ட அரசியல் அறிக்கை, பெண்ணாடம் மாநாட்டு அறிக்கை, மீன்சுருட்டி கருத்தரங்க அறிக்கை, தோழர் சுந்தரம் 1989-ல் வெளியிட்ட அறிக்கை போன்ற ஆரம்பகால ஆவணங்கள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன. இந்தக் கட்சியின் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கெடுத்து உயிர் இழந்த தருமலிங்கம், ஜெகநாதன், அன்பழகன், பழனிவேலு, வேலு, மாறன், லெனின், சின்னத்தம்பி, உத்திராபதி போன்றவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இந்த இயக்க நடவடிக்கைகளில் பங்கெடுத்த புலவர் கலியபெருமாள், தமிழ்வாணன், இராசேந்திரன், தனராசு, வடமலை, இன்குலாப், பாலன், சோழநம்பியார், செந்தாரகை, குணத்தொகை, ஈசுவரசன், பிறைநுதல் ஆகியோரின் நினைவுப் பதிவுகள் முழுமையாக உள்ளன. இவை அனைத்துமே கடந்த முப்பதாண்டு கால முக்கிய அரசியல் நடவடிக்கைகள். தமிழ்த்தேசிய அரசியல் பேசுபவர்களே மறந்து போன நிகழ்வுகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்