அவனது நிழல் உறங்கிவிட்டது

கவிதை: பழநிபாரதிஓவியம்: கோ.ராமமூர்த்தி

கொலைக்கும் தற்கொலைக்கும் இடையில்
அவன் உறங்கிவிட்டான்

உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில்
அவன் மீதான குற்றச்சாட்டு உறங்கிவிட்டது

விசாரணைக்கும் தீர்ப்புக்கும் இடையில்
அவனது வாக்குமூலம் உறங்கிவிட்டது

அவனது வெறித்த விழிகள்
சிறைச்சாலை இருண்டிருப்பதைக்
கவனித்திருக்கக் கூடும்.

அதன் இருள்
நீதிமன்றம் போகும் வழியெங்கும்
பரவிக் கிடந்ததைப் பார்த்திருக்கக் கூடும்

இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில்
அவனது நிழல் உறங்கிவிட்டது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்