“தற்கொலைதான்!” - திரையை விலக்கும் சிறை...

விளக்கம்

புழல் சிறையில் நிகழ்ந்த ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து ஏராளமான சந்தேகங்களும், சர்ச்சைகளும் கிளம்பி இருக்கும் நிலையில், ‘இது தற்கொலைதான்’ என்று அடித்துச் சொல்கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.

தமிழக சிறைத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “புழல் சிறையில் டிஸ்பென்சரி பிளாக்கில் உள்ள ஸ்விட்ச் பாக்ஸை உடைத்த ராம்குமார், மின் கம்பியைக் கடித்துள்ளார். அந்தத் தகவல் எங்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்கப்பட்டதும், சிறை மருத்துவர் நவீனை அழைத்துக்கொண்டு அங்கு சென்றோம். அப்போது, ராம்குமாருக்கு உயிர் இருந்தது. முதலுதவி அளித்து, ஆம்புலன்ஸில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் சையது அப்துல்காதர் தெரிவித்தார். ராம்குமாரைக் காப்பாற்ற பல முயற்சிகள் எடுத்தும் பலன் இல்லை. ராம்குமாரை நாங்கள் கொன்றுவிட்டதாக சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அதில் உண்மையில்லை” என்றார்.

சிறைத்துறை வட்டாரங்களில் பேசியபோது, “ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்த விசாரணைக் கைதிகளுக்கான பிளாக்கில், 10 அடி உயரத்தில் ஸ்விட்ச் பாக்ஸ் உள்ளது. அது பழுதடைந்து இருந்தது. ராம்குமார் உயரம் குறைவு என்பதால், அவரால் நிச்சயம் அந்த உயரத்தில் உள்ள ஸ்விட்ச் பாக்ஸை தொட்டிருக்க முடியாது. ஆனால், அருகில் உள்ள பெஞ்ச்சில் ஏறி ஸ்விட்ச் பாக்ஸை அவர் உடைத்துள்ளார். பொதுவாக, தமிழகத்தில் உள்ள சிறைகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. குறிப்பாக, புழல் சிறையில் எந்தவித பராமரிப்பும் இல்லை. சிறை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பல, பழுதடைந்து கிடக்கின்றன. இதனால், ராம்குமார் தற்கொலை குறித்த காட்சிகளின் பதிவு எதுவும் சிறை நிர்வாகத்திடம் இல்லை. ராம்குமார் மரணம் குறித்து திருவள்ளூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி, செப்டம்பர் 19-ம் தேதி புழல் சிறையில் அதிரடியாக விசாரித்தார். அப்போது, அவர் கேட்ட கேள்விகளுக்கு சிறை அதிகாரிகளால் சரியான பதில் சொல்ல முடியவில்லை” என்றனர்.

நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்