‘‘பிரபாகரன் கடிதத்தை கிழித்தவர் கருணாநிதி!’’

ரகசியத்தை வெளியிட்ட வைகோஅம்பலம்

காவிரிப் பிரச்னை எரிந்து கொண்டிருக்கும் சூழலில், அண்ணா பிறந்தநாள் மாநாட்டை திருச்சியில் செப்டம்பர் 15-ம் தேதி ம.தி.மு.க நடத்தியது. அதில், காவிரிப் பிரச்னை பற்றி அதிகமாகப் பேசிய வைகோ, கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.

‘‘தி.மு.க.வில் நான் எம்.பி-யாக இருந்தபோது 1989-ம் ஆண்டு வன்னிக்காட்டுக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அப்போது, அண்ணன் கலைஞருக்கு ஒரு கடிதத்தை பிரபாகரன் என்னிடம் கொடுத்து அனுப்பினார். அதை கலைஞரிடம் கொடுத்தேன். சில நாட்கள் கழித்து கலைஞரை சந்தித்தபோது, ‘பிரபாகரன் கடிதத்தைக் கிழித்துவிட்டேன்’ என்றார். இதுநாள்வரை மனதுக்குள் பூட்டிவைத்திருந்த ஒரு ரகசியத்தை, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சொல்கிறேன’’ என்று அந்தக் கடிதத்தை வைகோ வாசித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்