ஒரு வருட நஷ்டம் 15 ஆயிரம் கோடி!

ஆடிட் ரிப்போர்ட்அலசல்

ட்சிக்கு எதிரான செய்தி​களையோ,  தகவல்களையோ எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சொன்னால் அது சட்டமன்ற அவைக்குறிப்பில் ஏறாது. திட்டங்களில் முறைகேடு, குறைபாடு பற்றி பேச அனுமதி கிடைக்காது. அப்படிப்பட்ட சட்டமன்றத்தில்​தான் அரசின் திட்டங்களில் நடந்த வண்டவாளங்களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறது சி.ஏ.ஜி.

Comptroller and auditor general of India (CAG) என்கிற இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை, மத்திய, மாநில அரசுகளின் கணக்குகளை ஆய்வு செய்யும் அதிகாரம் கொண்ட தனி அமைப்பு. அரசின் திட்டங்களில் ஏற்பட்ட காலதாமதம், முறைகேடுகள், பணவிரயம், வரி ஏய்ப்பு, கையாடல், நிதி முடக்கம், பயனற்றச் செலவுகள், முறையற்ற நிர்வாகம், பயனற்ற முதலீடு என எல்லா அம்சங்களையும் சி.ஐ.டி-போலத் துப்பறிவதுதான் சி.ஏ.ஜி-யின் வேலை. ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி 2ஜி விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது சி.ஏ.ஜி-தான். விமானம் வாங்கியதில் முறைகேடு தொடங்கி நிலக்கரி ஒதுக்கீடு வரையில் நடந்த தகிடுதத்தங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது சி.ஏ.ஜி. தமிழக அரசின் பல்வேறு துறைகளையும் பொதுத் துறை நிறுவனங்களையும் ஒவ்வோர் ஆண்டும் அலசி ஆராய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும். அந்த ரிப்போர்ட்தான் தமிழக சட்டசபையில் வைக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்துக்கு எதிராக நிறைய விஷயங்கள் அந்த ஆடிட் ரிப்போர்ட்டில் இருந்தும், அது சட்டசபையில் வைக்கப்பட்டிருக்கிறது. சி.ஏ.ஜி-யின் ஆடிட் ரிப்போர்ட்டை சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் கட்டாயம் வைக்க வேண்டும் என்பது சட்டம். அந்த வகையில்தான் தணிக்கை, அறிக்கை தாக்கல் ஆனது. அந்த ஆடிட் ரிப்போர்ட்டில் இருந்து ட்ரெயிலர் இங்கே...

ஒரு மாநில அரசின் வருவாயில் விற்பனை வரி உள்ளிட்ட வரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாநில அரசு குறைவான வரி பெற்றது; வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்காமல் தவறவிட்டது; வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் உரிய அபராதம் வசூலிக்காமல் போனது என்று பல தவறுகளால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பைத் தமிழக அரசு சந்தித்துள்ளது.

வணிகவரி, மாநில ஆயத்தீர்வை, வாகனங்கள் மீதான வரி முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம், மின்வரி, சுரங்கம் மற்றும் கனிமவளங்களுக்குரிய வரி வரவுகளை ஆய்வு செய்ததில், குறைவான வரி மதிப்பீடு செய்ததால், 803 கோடி ரூபாய் இழப்பு.

விதிமுறைகளுக்கு மாறாக ரூ.40.90 கோடி செலவில், 9 புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்று அதில் தோல்வி அடைந்ததால் வேளாண்மைத் துறையில் நஷ்டம் ஏற்பட்டது. அதுபோல, வேளாண் திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த மானியத் தொகை 36.62 கோடி ரூபாயை மாநில அரசு பயன்படுத்தவில்லை. மேலும் தவறான நிதி மேலாண்மையால், ரூ.86 கோடி ‘நிதி முடக்கம்’ ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்