மிஸ்டர் கழுகு : தளபதிக்காக காத்திருந்த தலைவர்... தலைவருக்காக காத்திருந்த தளபதி!

‘‘ராம்குமார் கரன்ட் ஷாக்கில்தான் இறந்தாரா?’’ என்று கிண்டலாகக் கேட்ட கழுகார், கையோடு கொண்டு வந்திருந்த வேர்க்கடலைப் பொட்டலத்தைப் பிரித்து மேஜை மீது கொட்டிவிட்டு அமர்ந்தார். ‘‘ஏதோ செய்திக்கு லீட் கொடுக்கிறீர் என்பது மட்டும் புரிகிறது?’’ என்றபடியே சூடு பறக்க காபியை கழுகார் முன் வைத்தோம்.

‘‘ம்ம்.... இதுவும் ‘கரன்ட்’டான நியூஸ்தான். கடந்த ஆட்சியில் ‘பவர்’ மினிஸ்டராக பவனிவந்த நத்தம் விசுவநாதன் இன்று சாஸ்திரி பவனுக்கு விசாரணைக்குச் செல்லும் நிலைக்கு ஆளாகிவிட்டார். அன்புநாதன் விவகாரத்தில் ஆரம்பித்த சிக்கல், நிலக்கரி இறக்குமதி, வெளிநாடுகளில் பணப் பரிவர்த்தனை, அந்நிய முதலீடு என வருமான வரித்துறையின் விசாரணை வளையத்தில் இணைந்துள்ளது. கடந்த வாரம் ரெய்டு நடத்தப்பட்டு சில ஆவணங்களையும் சாஸ்திரி பவனுக்கு எடுத்துச் சென்றது வருமானவரித் துறையின் அமலாக்கப் பிரிவு. அதுகுறித்து விளக்கம் பெறுவதற்காகத்தான், நத்தத்தையும் அழைத்து விசாரித்தனர். இது வெளியே தெரிந்து ‘நத்தம் விசுவநாதன் கைது செய்யப்பட்டுவிட்டார்’ என தகவல் பரவியது. ஆனால் அப்படி நடக்கவில்லை.’’

‘‘ஓஹோ!”

‘‘கரூர் அன்புநாதன் வீட்டில் தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினர் 5 கோடி ரூபாய் கைப்பற்றினார்கள். அன்புநாதன் டைரி, ஆவணங்கள், சி.சி.டி.வி கேமிரா பதிவுகள் ஆகியவற்றை சோதித்த அதிகாரிகள், அமைச்சர்கள் நடத்திய நிழல் சாம்ராஜ்யங்கள் தெரிந்து மலைத்துபோனார்களாம். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன் சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வெற்றி, விசுவநாதன் மகன் அமர்நாத், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் உள்ளிட்டோரும் அன்புநாதனுடன் நெருக்கமாக இருந்தது மட்டுமல்லாமல், திரைமறைவு வேலைகளையும் செய்துள்ளது தெரியவந்துள்ளது.”

‘‘வசூலில் வாரிசுகளை இறக்கிவிட்டுள்ளார்கள்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்