வருமானவரி ரெய்டு... நாராயணசாமிக்கு செக்!

தள்ளிப்போகும் இடைத்தேர்தல்?

“காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தொல்லைகள் கொடுப்பதை பி.ஜே.பி. வழக்கமாகக் கொண்டிருக்கிறது” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சொல்லிய அடுத்த சில மணி நேரங்களில், அவருக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி புதுவை அரசியல் வட்டாரத்தை அதிரவைத்தது வருமான வரித்துறை.

புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ‘சாம பேத தான தண்டம்’ என அனைத்தையும் பயன்படுத்தி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் நாராயணசாமி. அவர், தேர்தலில் நிற்காத காரணத்தால், முதல்வராக அமர்ந்து ஆறு மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த நிலையில், நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட முடிவுசெய்தார் நாராயணசாமி. விட்டுக்கொடுக்கத் தயக்கம் காட்டினார், நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ-வான ஜான்குமார். திருட்டு லாட்டரி தொடர்பான அதிரடி வேட்டை ஆரம்பமானது, தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்தார் ஜான்குமார். எம்.எல்.ஏ பதவியை ஜான்குமார் ராஜினாமா செய்த நிலையில், கடந்த 18-ம் தேதி அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

யார் இந்த ஜான்குமார்? “சில ஆண்டுகளுக்குமுன், புதுச்சேரி பஸ் நிலையத்தில் இவர் லாட்டரி விற்றார். பிறகு, லாட்டரி ஏஜென்சி ஆரம்பித்து கோடிகளைக் குவித்தார். அறக்கட்டளை என்ற பெயரில் நடமாடும் இலவச ரேஷன் கடை உட்பட பல இலவசங்கள் மூலம் அரசியலில் நுழைந்தார். தி.மு.க-வில் இருந்து நாராயணசாமி மூலம் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். அனுமதியின்றி ஏலச்சீட்டுகள் நடத்தினார். அதில் போலீஸ் அதிகாரிகள், நீதித்துறையினர், அரசியல் புள்ளிகள் என அதிகார மட்டத்தினர் பலர் இருக்கிறார்கள். அதைவைத்து கேபிள் நிறுவனம், ரியல் எஸ்டேட் ஏஜென்சி என தொழிலை விரிவுபடுத்தினார்” என்கிறார் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்