‘‘கன்னட மக்களுக்கு நன்றி!’’

கே.பி.என்.உரிமையாளர் பேட்டி

“எங்களோட 42 சொகுசு பஸ்கள், 3 பிக்கப் வேன்கள் என 45 வாகனங் களைத் தீவைத்துக் கொளுத்தி விட்டார்கள். அவை அனைத்தும், கர்நாடகப் பதிவு எண் கொண்டவை. அப்படி இருந்தும், அந்த வாகனங்களின் உரிமையாளர் ஒரு தமிழர் என்ற காரணத்தால் அவற்றை எரித்துள்ளனர். இதனால், சுமார் 20 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று வருத்தத்துடன் சொல்கிறார் கே.பி.என்.டிராவல்ஸ் உரிமையாளர் கே.பி.நடராஜன்.

அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“அந்தக் கோரச் சம்பவம் எத்தகைய சூழ்நிலையில் நிகழ்ந்தது?”

“சம்பவம் நடந்தபோது நான் அங்கே இல்லை. நடந்த சம்பவங்களை என்னிடம் டிரைவர்கள் விவரித்தார்கள். டிரைவர்கள், இரவு முழுவதும் பஸ் ஓட்டிவிட்டு பஸ்ஸை ஷெட்டில் போட்டுவிட்டு பகலில் தூங்கிவிடுவார்கள். மாலை நாலரை, ஐந்து மணிக்கு எழுவார்கள். அப்படித்தான், பெங்களூரு மைசூர் சாலையில் உள்ள எங்களுடைய ஷெட்டில் டிரைவர்கள் இருந்துள்ளனர். டூவிலரில் உருட்டுக் கட்டைகளோடு 300-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல், நெடுஞ்சாலையில் இரண்டு மூன்று லாரிகளுக்குத் தீவைத்துவிட்டு எங்களுடைய ஷெட்டுக்குள் புகுந்துள்ளனர். ஷெட்டுக்குள் இருந்தவர்களையும், வண்டிக்குள் தூங்கிக்கொண்டிருந்த டிரைவர் களையும் வெளியே இழுத்துவந்துள்ளனர். அவர்களை உருட்டுக்கட்டையால் அடித்துச் சட்டை லுங்கியைப் பிடுங்கிக்கொண்டு, ஜட்டியோடு துரத்தியுள்ளனர். பிறகு, பஸ்களுக்கு தீ வைத்துள்ளனர்.”

“மெக்கானிக், டிரைவர் உட்பட ஏராளமான ஊழியர்கள் அங்கு இருந்திருப்பார்களே. அவர்கள், உடனே போலீஸுக்குத் தகவல் கொடுக்கவில்லையா?”

“மாலை 5 மணி என்பது அடுத்த பயணத்துக்குத் தயாராகும் நேரம். டிரைவர்கள் குளிப்பதற்குப் போவார்கள். டீ சாப்பிட வெளியே போவார்கள். எங்கள் ஊழியர்கள் அத்தனை பேரும் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் அவர்களால் என்ன செய்திருக்க முடியும்? உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், போலீஸ் வந்தார்களா..? இல்லையா? என்று தெரியவில்லை.”

“ஊழியர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டன?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்