‘‘விக்னேஷ் உயிருடன் இருந்து போராடியிருக்கலாம்!’’

கதறி அழும் தந்தைசோகம்

காவிரிக்காக கர்நாடகத்தில் தமிழர்களும் தமிழக வாகனங்களும் சூறையாடப்பட... தமிழகத்தில் உயிர் தியாகம் செய்திருக்கிறான் ‘நாம் தமிழர்’ கட்சியை சேர்ந்த விக்னேஷ். கர்நாடகத்துக்குக் கண்டனம் தெரிவிக்க நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விக்னேஷ் தீ குளித்தது அதிர்வலைகளை உண்டாக்கியது.

கண்டன பேரணியில் பங்கேற்ற விக்னேஷ் முன்னரே பெட்ரோலில் நனைத்து மறைத்துவைத்திருந்த டீ சர்ட்டை மாட்டிகொண்டு உடலில் தீ வைத்துக்கொண்டார். டிப்ளமோ இன்ஜினீயரான விக்னேஷ் தமிழகத்தின் மீதும், தமிழீழத்தின் மீதும் ஈர்ப்பு கொண்டவர். நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் அணி பாசறை செயலாளராக இருந்தவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைத் தேடி சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு வந்து, ஆவடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைசெய்து வந்தார்.

கர்நாடகாவில் தமிழர்கள் பாதிக்கப்படுவதை எண்ணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அந்தச் சமயத்தில் நாம் தமிழர் கட்சி பேரணி நடத்த, இதுதான் நேரம் என்று தன் உயிரை தமிழ்நாட்டின் எழுச்சிக்காகப் பணயம் வைத்திருக்கிறார். தீக்குளிப்பதற்கு முதல் நாள் ஃபேஸ்புக் பதிவில், “நாளை நடைபெறும் பேரணியில் பல தற்கொலை (தற்கொடை) போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளன. அப்போதாவது மானத்தமிழ் இனம் கொதித்து எழட்டும். மாணவர் போராட்டம் இந்த மண்ணில் வெடிக்கட்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்