மிஸ்டர் மியாவ்

‘உலக அழகி ஐஸ்வர்யா என் பொண்டாட்டி’ என்று காலரைத் தூக்கிவிட்டுத் திரிந்தார், அபிஷேக் பச்சன். நன்றாகப் போய்க்கொண்டிருந்த அவர்களின் குடும்ப வாழ்க்கையில், திடீரென பூதம் கிளம்பியது. ‘கல்யாணத்துக்கு முன்னாடி பழகின நண்பர்களிலே, என்னால் இப்பவும் மறக்க முடியாதவர் சல்மான்கான்’ என்று ஐஸ்வர்யா ராய் சொல்ல... ஆரம்பித்தது ஏழரை. குடும்ப உறவுகள் சிதைந்துவிடக் கூடாது என  இருவரையும் ஃபெவிக்கால் போட்டு ஒட்டவைத்தும்கூட, பச்சனும் ராயும் முறுக்கிக்கொண்டு திரிகிறார்கள்.

ரு காலத்தில் பாலிவுட்டில் பூபாளம் பாடித்திரிந்தவர் நேபாள அழகி மனீஷா கொய்ராலா. 2010-ல் சொந்தபூமி தொழிலதிபர் சாருராட் தலாலை மணந்த கொய்ராலா, குடும்ப வாழ்வில் நொந்துபோனார்.  கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்ந்தனர். மனம் வெறுத்த மனீஷா, ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டினார்.  மனம் துறவறம் வேண்டியது. உடல் இல்லறம் விரும்பியது. ஒரு குழந்தையைத் தத்து எடுக்கத் திட்டமிட்டு இருக்கும் மனீஷா, அப்படியே புதுக்கணவரைத் தேடுவதிலும் தீவிரமாக இருக்கிறார். அன்புள்ளம் கொண்டோர் அணுகலாம்.

ன்னி லியோன் தோற்றத்தைக் கண்டு, பாலிவுட் சினிமாக்காரர்கள் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள். தினமும் மாலை இருட்டி விட்டால் பாருக்கு... ஸாரி, ஜிம் பாருக்குச் செல்பவர்... கடுமையான உடற்பயிற்சிகள் செய்து ஸ்லிம் லியோனாகக் காட்சி அளிக்கிறார். தற்போதைய அவரது தோற்றத்தைக் கண்டு மருண்டுவிட்டார்கள். திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? எனக் கேட்டால், பாலிவுட்டில் என்னை ‘குண்டு கத்திரிக்கா... குள்ளி நடிகை’ என எள்ளி நகையாடினர். தினசரி கடுமையாக உடற்பயிற்சி செய்து எடையைக் குறைத்தேன்’ என்கிறார், லியோன்.      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்