“ஒத்திகைக் கூடமா புழல் சிறை?” - சாட்டையை வீசும் சந்துரு

பேட்டி

“ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதை நம்ப முடியாது” என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு. அவரிடம்  சில கேள்விகளை எழுப்பினோம்.

“ராம்குமார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்வதற்கு எந்தளவுக்கு சாத்தியம் உள்ளது?”

“நான் நீதிபதியாக இருந்தபோது, தமிழக சிறைகளில் கைதிகளின் நிலைமைகளைப் பரிசீலித்து சிறை சீர்திருத்தங்களுக்கு உத்தரவிட்டேன். கைதிகளின் அறைகளில் மின்விசிறி வைக்கச் சொன்னேன். அதற்கு, சிறை நிர்வாகமும் அரசும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மின்கம்பிகள் கைதிகளின் அறைக்குள் கொண்டுவரப்பட்டால் தவறுகள் நடக்கும் என வாதிட்டனர். மின்கம்பிகளை சுவற்றுக்குள் பதித்து, கூரையின் உச்சியில் மின் இணைப்பு கொடுத்தால் விபத்துகளைத் தடுக்கலாம் என உத்தரவிட்ட பிறகுதான் சிறைகளில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டன. இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்பட்ட கைதியை தூக்கிலிடுவதன் மூலமே அவரது உயிர் பறிக்கப்படும். அமெரிக்காவில் மட்டும்தான் மின்சார நாற்காலியில் பிணைத்து உயிரைப் பறிக்கும் தண்டனை நடைமுறையில் உண்டு. ஒருவேளை புழல் சிறை சம்பவம் அப்படிப்பட்ட தண்டனைக்கு ஒத்திகையா என்று தெரியவில்லை.”

“சிறையின் அனைத்துப் பகுதிகளிலும் திறன்வாய்ந்த சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ராம்குமாரின் தற்கொலை(?!) அந்த சி.சி.டி.வி பதிவுகளில் இருக்க வாய்ப்புள்ளதா?”

“சிறைக்கைதிகளின் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆனால், சிறைக்குள்ளிருக்கும் பொது வெளிகளில் பொருத்தவேண்டும். சமையற்கூடத்துக்கு அருகில் இருக்கும் கேமரா செயல்படாத நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறுவது இன்னும் ஐயங்களை அதிகப்படுத்துகிறது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்