இருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்!

பேட்டி

சுவாதி கொலை செய்யப்பட்டார். அதற்குக் காரணம் என்று குற்றச்சாட்டப்பட்ட ராம்குமார் மர்மமான முறையில் இறந்து போனார். சுவாதியை ராம்குமார் காதலித்தார், அதனை சுவாதி மறுத்தார், அதனால் கோபம் அடைந்த ராம்குமார் சுவாதியை கொலை செய்தார்... இதுதான் போலீஸ் சொல்லப்போகும் குற்றப்பத்திரிகை. சுவாதி கொலை செய்யப்பட்டது முதல் இன்னொரு விஷயம் பேசப்பட்டது. ‘முஸ்லிம் இளைஞர் பிலாலை சுவாதி காதலித்தார். அதனை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. இந்தப் பின்னணியில் சுவாதி கொலை செய்யப்பட்டார்’ என்பது இன்னொரு வட்டாரம் சொல்லும் செய்தி. இதைத்தான் பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி சொல்லி  வருகிறார். சுவாதியின் பெற்றோர், மீடியாவை சந்திக்க மறுத்தே வந்தார்கள். போலீஸும் ராம்குமாரைத் தாண்டி எது பற்றியும் பேசத் தயாராக இல்லை. இந்த நிலையில், ‘கருப்பு’ முருகானந்தம் தலை உருண்டது.

‘சுவாதி படுகொலைக்குக் காரணம் கருப்பு முருகானந்தம்தான். சுவாதி, மதம் மாறி திருமணம் செய்ய முடிவு எடுத்த காரணத்தால்தான் கொல்லப்பட்டார். கொலை நடந்த பகுதியில் சி.சி.டி.வி-யில் பதிவான மர்மநபர் குறித்த காட்சியை பத்திரிகைகள் வெளியிட்டன. அதன்பின், ராம்குமார் நடந்து போவதாகக் கூறி மற்றொரு காட்சியை வெளியிட்டனர். முதலில் காட்டிய மர்ம நபர் யார்? அவர் கருப்பு முருகானந்தத்தின் கூலிப்படையைச் சேர்ந்தவர்...’ எனத் தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சியைக் அதிகரித்து வருகிறார் தமிழச்சி. இந்தத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் சூட்டைக் கிளப்பி வருகின்றன.

அந்த  கருப்பு முருகானந்தம், பி.ஜே.பி-யின் மாநில பொதுச் செயலாளராகவும், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் அறங்காவலராகவும் இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

“உங்கள்  மீது சர்ச்சை வளையம் எழுப்பப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“சுவாதி கொலை வழக்கு தொடர்பாகப் பல சந்தேகங்களை மீடியாக்கள் எழுப்பி வருகின்றன. அதில் என்னைத் தொடர்புபடுத்தி சில கும்பல்கள் திட்டமிட்டு வேலை செய்கின்றன. என்னை ஒரு கொலைகாரனாகச் சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. ‘மதம் மாறினால் இந்துத்துவ அமைப்பினர் கொலைசெய்வார்கள்’ என்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். மதம் மாறினால் கொலை செய்வது என்பது இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்யும் வேலை. அப்படி ஒரு காரியத்தை எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. சுவாதி கொலை வழக்கில் என்னைத் தொடர்புபடுத்தி, இணையதளத்தில் செய்திகள் வெளியானதைச் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஆனால், பி.ஜே.பி மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் பற்றி தவறான தகவல்களை  விதைத்து, கெட்ட இமேஜை உருவாக்கும் காரியத்தில் தமிழச்சி போன்றவர்கள் ஈடுபடுகிறார்கள். தலித் மக்களுக்கு நாங்கள் விரோதி என்பதுபோல செய்தி பரப்புகிறார்கள்.”

“ ‘சுவாதியின் தந்தையை உங்களுக்குத் தெரியும் என்றும், அவர் மூலமாகத்தான் படுகொலை நடந்தது’ என்றும் இணையத்தளத்தில் பதிவுகள் வெளியானதே?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்