கொள்ளையர் கூட்டு... போலீஸ் லூட்டு! - கோவை ‘லபக்’

கேவலம்

டுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிவருகிறது தமிழக போலீஸ். ராம்குமார் மர்ம மரணத்தால் போலீஸ் மீது எழுந்த கண்டனக் குரல்களே இன்னும் அடங்காத நிலையில், மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழகக் காவல் துறை. கோவையில் ஹவாலா பணம் ரூ.3.93 கோடியை காருடன் பறித்துச் சென்றதாக
இன்ஸ்​பெக்டர், எஸ்.ஐ., தலைமைக் காவலர் என மூன்று பேர் தொடர்பிருப்பது தெரியவர... போலீஸுக்கு எதிரான கண்டனக்குரல்கள் வலுத்து வருகின்றன.

கடந்த 25-ம் தேதி காலை. கோவை அடுத்த மதுக்கரை அருகே, சென்னையில் இருந்து மலப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்த காரை போலீஸ் உடையில் இருந்தவர்கள் தடுத்து சோதனை நடத்தினர். காரில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது. காரில் இருந்து 4 பேரையும் இறங்கச்சொல்லிய போலீஸ் உடையில் இருந்தவர்கள், அங்கிருந்து காருடன் சென்றனர். காரில் வந்தவர்கள் பதறிப்போய் அருகில் உள்ள காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். ரூ.3.90 கோடி பணத்துடன் காரை போலீஸார் பறிமுதல் செய்துவிட்டதாகச் சொல்ல... கோவை எஸ்.பி-யான ரம்யா பாரதி விசாரணை நடத்தினார்.

காரில் வந்தவர்கள், கேரளா மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த அன்வர் சதாத் என்ற தொழிலதிபரிடம் பணிபுரிபவர்கள் என்றும், அன்வர் சதாத் கொடுத்த தங்கத்தை சென்னையில் விற்று அதில் கிடைத்த ரூ.3.90 கோடியை மலப்புரம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. போலீஸ் உடையில் கொள்ளையர்கள் இந்தக் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என சொல்லப்பட்டது. ஹவாலா பணம் என்பதால் பணம் கொள்ளை போனதாக போலீஸார் வழக்கு பதியவில்லை. மீடியாக்களிடமும் கார் மட்டுமே கொள்ளை போனதாகச் சொன்னது போலீஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்