ராம்குமாரை சந்தித்த 3 டாக்டர்கள் நியாயமாக நடந்து கொண்டார்களா? - கொதிக்கும் மனநல மருத்துவர்!

இடம் மாறிய சுவாதி குடும்பம்.. வீடியோ மர்மம்... ரிலீஸ் ஆன போட்டோ!மர்மம்

சுவாதி கொலையில் சிறைக்காவலில் நிகழ்ந்த ராம்குமார் மரணத்தால் காவல்துறையும் அரசும் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றனர். இவர்கள் மட்டுமா குற்றவாளிகள்? ‘‘ராம்குமார் விவகாரத்தில் டாக்டர்கள் ரோல் என்ன என்பதை இந்த சமூகம் மறந்துவிட்டது’’ என வெடிக்கிறார் சென்னை அரசு மனநல காப்பகத்தின் மனநல மருத்துவர் அரவிந்தன் சிவகுமார்.

“உண்மை முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாத நிலையில் பொய்யும், புனைவுமான பல கதைகள் உலவிக்​கொண்டிருக்கின்றன. உண்மையில் ராம்குமாரின் மரணம் இப்போது நிகழவில்லை. அவன் நெல்லை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த நாளிலேயே நிகழ்ந்துவிட்டது. நிரபராதி என ஊர்ஜிதப்படுத்தும் வரை ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டவர் குற்றம்சாட்டப்பட்டவர் என்றுதான் அழைக்கப்பட வேண்டும் என்கிறது சட்டம். ஆனால் ராம்குமார் விஷயத்தில் சுவாதி கொலையான மறு நிமிடத்திலிருந்தே அவர் குற்றவாளி என்றே அடையாளப்படுத்தப்பட்டார். ‘ஒருதலைக் காதல் பிரச்னை, பிடிக்க முயலும்போது கழுத்தை அறுத்துக்கொண்டார்’ என திட்டமிட்ட செய்திகள் போலீஸால் பரப்பப்பட்டன. அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மருத்துவமனை அறுவைசிகிச்சை அரங்கின் உள்ளேயே காவல் துறை விசாரணை நடத்தியது. சமூக வலைத் தளங்களில் அதன் வீடியோ காட்சிகள் பரவின. ராம்குமாரின் விஷயத்தில் அவர் பேசுவதற்கான வாய்ப்பை நாம் கொடுக்கவே இல்லை. பிடிபட்ட முதல் நாளில் இருந்தே அவர் வலுக்கட்டாயமாக மெளனமாக்கப்​பட்டான். அவன் பேசினால் பல உண்மைகள் வெடித்துக்கிளம்பும் என்பதாலேயே ராம்குமார் மீது மவுனம் திணிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்