மிஸ்டர் கழுகு : காவிரி வாரியம் மத்திய அரசுக்கு செக்... கர்நாடகாவுக்கு திக்!

‘சைதைக்கு செக்... வளர்மதிக்கு லக்’ என கழுகார் அனுப்பிய வாட்ஸ் அப் தலைப்பு வந்து சேர... கழுகாருக்காகக் காத்திருந்தோம். ‘‘உள்ளாட்சித் தேர்தல் உற்சாகம் ஆரம்பித்துவிட்டது. இந்த வாரத்திலேயே அறிவிப்பு வெளியாகலாம்” என சொல்லியபடி வந்து அமர்ந்தார் கழுகார்.

“உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் ஆண்களைவிட பெண்கள்தான் ஏக உற்சாகத்தில் இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சி மேயர் உட்பட பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் பட்டியல் ரிலீஸ் ஆகியிருக்கிறது. பழமையான சென்னை மாநகராட்சியில் முதல் முறையாக பெண் மேயராகும் வாய்ப்பு இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் அரசியல் புதைந்திருக்கிறது’’ என சொல்லி குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்தார் கழுகார்.

‘‘தற்போது மேயராக இருக்கும் சைதை துரைசாமியின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. அம்மா தியேட்டர் தொடங்கி கலர் கலராக மத்தாப்புகளை காட்டினாரே தவிர, உருப்படியாக எதையும் சாதிக்கவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது, மாநகராட்சியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளானது. இப்படிப்பட்ட சூழலில்தான், சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் வீட்டில் வருமானவரித் துறை சோதனை போட்டது. நத்தம் விசுவநாதன், அன்புநாதன் ஆகியோர் உடனான தொடர்புகள் வெளிச்சத்துக்கு வந்தன. எப்படியாவது மீண்டும் மேயர் ஆகிவிட சைதை துரைசாமி காய்கள் நகர்த்தி வந்தார். மன்றக் கூட்டங்களில் தலைவியைப் பாராட்டிப் பேசினார். அது, பக்கம் பக்கமாக செய்தியாக வெளிவந்தது. கடைசியாக நடந்த மன்றக் கூட்டத்தில் ஜெயலலிதா பற்றி உருகிப் பேசினார். ஆனால், அவர் ஆசைக்கு ஆப்பு வைத்துவிட்டார் ஜெயலலிதா. சைதை துரைசாமியின் நடவடிக்கை பிடிக்காமல் அவருக்கு செக் வைக்க நினைத்துதான் சென்னை மாநகராட்சி மேயர் பதவியைப் பெண்களுக்கு ஒதுக்கிவிட்டார்.’’

‘‘வளர்மதிக்கு லக் என்பதற்கு என்ன அர்த்தம்?’’

‘‘சட்டசபைத் தேர்தலில் சென்னையில் போட்டியிட்டுத் தோற்றவர்கள் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதியும் கோகுல இந்திராவும். அதனால், அதிகாரமிக்க பதவிகளில் அமர அவர்கள் காய் நகர்த்தி வந்தார்கள். வைத்திலிங்கம் ஒரத்தநாட்டில் தோற்றப் பிறகும் ராஜ்ய சபா எம்.பி. ஆக்கப்பட்டது போல, தங்களுக்கும் சான்ஸ் அடிக்கும் எனக் காத்திருக்கிறார்கள். திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் தோற்ற நூர்ஜஹானும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார். மேயருக்கு நேரடியாக தேர்தல் கிடையாது. கவுன்சிலர்கள்தான் மேயரை தேர்வுசெய்யும் முறை இப்போது மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வசதியாக வளர்மதியும், தான் தோற்ற ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட 111-வது வார்டை குறிவைத்து வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இந்த வார்டில்தான் கருணாநிதியின் கோபாலபுரம் வீடும் வருகிறது. அதே நேரம் முதல்வரின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட 40-வது வார்டிலும் வளர்மதி நிற்பதற்கு வாய்ப்புள்ளது என பேச்சு இருக்கிறது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்