“நீதிபதிகளையும் மிரட்டுவார்கள்!”

பேட்டி

‘ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வாரத்துக்குள் தீர்ப்பு’ என்று உச்ச நீதிமன்றத்தை உச்சரிக்க வைத்தவர் வழக்கறிஞர் ரத்தினம்.  சொத்துக் குவிப்பு வழக்கை நேர்மையாக நடத்தியதற்காக அ.தி.மு.க-வினர் தன்னை எப்படி மிரட்டினார்கள்... எங்கிருந்து எல்லாம் தனக்கு அழுத்தம் வந்தது என்பது பற்றி ‘நினைவுகளில் இருந்து...’ (All from memory) என்ற தனது சுயசரிதையில் துயரத்துடன் குறிப்பிட்டு இருந்தார் வழக்கறிஞர் ஆச்சார்யா. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டுபோய், போயஸ் கார்டனுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தி இருப்பவரும் ரத்தினம்தான். அவரிடம் பேசினோம்.

“கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு ஆதரவாக, நீங்கள் வழக்கு நடத்த வேண்டிய அவசியம் என்ன?”

“சொத்துக்குவிப்பு வழக்கை நேர்மையாக நடத்தினார் என்பதற்காக ஆச்சார்யா பல துயரங்களை அனுபவித்துள்ளார். அந்தத் துயரங்கள் அவருக்கானவை மட்டும் அல்ல. அவை, நீதித் துறைக்கு விடப்பட்ட சவால்கள்;    நீதித்துறையைச் சூழ்ந்துள்ள ஆபத்துகள். இதை அப்படியேவிட்டால், நேற்று அரசு வழக்கறிஞரை மிரட்டியவர்கள், நாளை நீதிபதிகளையும் மிரட்டுவார்கள். பிறகு, எளிய மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?”

“நீங்கள் தொடர்ந்துள்ள வழக்கின் சாரம் என்ன?”

“ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருவுக்கு மாற்றச் சொன்னது உச்ச நீதிமன்றம். ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமித்தது, கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி. வழக்கை விசாரித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். வழக்கின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தது உச்ச நீதிமன்றம். இப்படி... நீதித்துறையின் அனைத்து மட்டங்களின் பார்வையில் அந்த வழக்கு நடந்தபோதே, அரசு வழக்கறிஞருக்குத் தொடர்ந்து இடையூறுகள் கொடுக்கப்பட்டன. ஆச்சார்யாவை நியமித்தது தவறு என்று குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வழக்குப் போட்டது. இரண்டு வழக்கறிஞர் பதவிகளில் இருக்கக்கூடாது என்று வழக்குப் போட்டனர். கவர்னரிடம்  மனுக் கொடுத்தனர். நீதித்துறையின் செயல்பாடு களில் மத்திய அரசு தலையிட்டது. அப்போது, கர்நாடகா முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, ‘இரண்டு பதவிகளில் ஒன்றை ராஜினாமா செய்யுங்கள். ஜெயலலிதா வழக்கில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். அரசுத் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருங்கள்’ என ஆச்சார்யாவிடம் சொல்லியிருக்கிறார். அதே இடத்தில், அரசுத் தலைமை வழக்கறிஞர் பதவியை ஆச்சார்யா ராஜினாமா செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்