மானத்தை வாங்கும் மதுரை மாநகராட்சி

ஓவியம்: கண்ணா

ங்கம் வைத்து தமிழ் வளர்த்த தலைநகரம்... தூங்கா நகரம்... என்றெல்லாம் புகழப்படும் மதுரை மாநகரம் சர்வதேச நகரமாகி இருக்க வேண்டும். ஆனால், மாநகரை ஆண்டவர்களோ தங்களது ‘திறமை’யால் மதுரை மாநகராட்சியின் புகழை ‘மங்க’ வைத்திருக்​கிறார்கள்.

மூன்று மாநகராட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்து தி.மு.க-வே தக்கவைத்துக் கொண்டிருந்த மதுரை மேயர் பதவியை, 2011-ல் அ.தி.மு.க. கைப்பற்றியது. மதுரை மாநகராட்சியை, அ.தி.மு.க-வின் மூத்த அரசியல்வாதியான ராஜன் செல்லப்பா சிறப்பாகக் கொண்டு வருவார் என நம்பி அவரை மேயர் ஆக்கினார்கள் மக்கள்.

திருப்பரங்குன்றம் அருகிலுள்ள சேக்கிலுப்​பட்டிதான் ராஜன் செல்லப்பாவின் பூர்வீகம். நீண்ட காலத்துக்கு முன்பே பசுமலையில் செட்டிலாகிவிட்டார். தந்தை தலைமை ஆசிரியர். உறவினர்கள் பலரும் ஆசிரியர்கள், சகோதரி பல்கலைக்கழக துணைவேந்தர், ராஜன் செல்லப்பாவும் சட்டம் தெரிந்தவர்... இப்படி, மரியாதைமிக்க குடும்பம் என அனைத்தையும் கணக்குப்போட்டுத்தான் மக்களும் ஓட்டுபோட்டனர். ஆனால், அவர்களுக்கு ராஜன் செல்லப்பா ‘நாமம்’தான் போட்டார். மாநகராட்சியின் நலனில் ‘அக்கறை’ காட்டவேண்டியவர் தன்னுடைய ‘வளர்ச்சி’யில்தான் ஆர்வம் காட்டினார். விளைவு... மாநகராட்சி அதிகாரிகளும் முறைகேடுகள் செய்வதையே தங்களது வரைமுறையாக்கிக் கொண்டனர். ‘கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்’ என்கிற மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்கில் அதிகாரிகளைக் கண்டு கொள்ள​வில்லை மேயர். அமைச்சர் செல்லூர் ராஜு தன் பங்குக்கு மாநகராட்சி நிர்வாகத்துக்குள் தலை நீட்ட... அதை சமாளிக்கவே ராஜன் செல்லப்பாவுக்கு நேரம் போதவில்லை. செல்லூர் ராஜு ஒரு கூட்டம் போட்டால் மேயர் ஒரு கூட்டம் போடுவார். அவர் பால்காவடி எடுத்தால், இவர் சண்டி யாகம் நடத்துவார். செல்லூர் ராஜு - ராஜன் செல்லப்பா பவர் பாலிடிக்ஸில் பாவப்பட்ட ஜென்மங்கள் மதுரைவாசிகள்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்