நிர்வாணமாக நிற்பது மோடி அரசுதான்! | Tamil Nadu Farmers protest in Delhi issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/03/2017)

நிர்வாணமாக நிற்பது மோடி அரசுதான்!

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் பிரச்னை தொடர்பாக சந்திக்கச் சென்ற திரைக்கலைஞர்களை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவமானப் படுத்தியதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை முறையிட வந்த நடிகர் களை உட்காரக்கூடச் சொல்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, அவர்களை உடனே அனுப்பியிருக்கிறார் அருண் ஜெட்லி.

‘விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என மாணவர்களுக்குப் பாடம் நடத்திவிட்டு, அந்த முதுகெலும்பை முறித்துப்போடும் வேலையை இரக்க மின்றி செய்கிறார்கள்  நம் ஆட்சியாளர்கள். விளைபொருள்களுக்கு கட்டுபடியாகாத விலை, இடுபொருள்களின் விலையேற்றம், மானியங்கள் வெட்டு, கடன் சுமை... என விவசாயிகள் மீது தொடர்ந்து மரண அடிகளாகவே விழுகின்றன. 

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 14-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினார்கள் தமிழக விவசாயிகள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் சார்பில் போராடும் இவர்களுக்கு, அங்கு வசிக்கும் தமிழர்கள் முதல் பலரும் ஆதரவாக இருக்கிறார்கள். அங்கு போராடி வரும் வேறு மாநில விவசாயிகளும், தமிழக விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க