காலாவதியான பேருந்துகள் காயலாங்கடைக்குப் போகவில்லை!

ஜூ.வி. புலனாய்வு! - RTI அம்பலம்

நீங்கள் சென்னையில் ஒரு மாநகரப் பேருந்தில் பயணம் செய்பவரா? அல்லது, அந்தப் பேருந்துகள் செல்லும் சாலையில் அப்பாவியாக டூ-வீலரிலோ, நடந்தோ செல்பவரா? உங்களுக்காகச் சில அதிர்ச்சித் தகவல்கள். உங்களைப் போல லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும், சாலைகளில் எதிர்கொள்ளும் சென்னை மாநகரப் பேருந்துகளில் பல, எமனுடைய வாகனத்தைப்போல ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பேருந்துகளில் பயணம்செய்யும் மக்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ‘‘சென்னையில் மட்டுமல்ல... தமிழகம் முழுக்க அரசுப் பேருந்துகளின் நிலைமை இதுதான்’’ என்கிறார்கள், போக்குவரத்துக் கழகங்களில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்து பார்த்திருக்கிறீர்களா? கிழிந்த இருக்கைகள், உடைந்த படிக்கட்டுகள், கழன்று ஓடும் சக்கரங்கள்,  கிழிந்து ஓட்டையான மேற்கூரை, தலைவலியை உண்டாக்கும் பேரிரைச்சல் என ‘டெர்ரர்’ கண்டிஷனில் பஸ்கள் ஓடிக்கொண்டிருக் கின்றன. இதுகுறித்து போக்கு வரத்துத் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆயுள்காலம் முடிவடைந்த ஏராளமான பேருந்துகளை சென்னை மாநகரப் போக்கு வரத்துக்குக் கழகம் இயக்குகிறது. ஆயுள்காலம் முடிவடைந்தும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமெனில், ஆர்.டி.ஓ-விடம் தகுதிச் சான்றிதழ் (Fitness Certificate) வாங்க வேண்டும். இந்த விதியைப் பயன்படுத்தி, காயலாங்கடைக்குப் போக வேண்டிய பேருந்துகளுக்கும் தகுதிச் சான்றிதழ்கள் வாங்கி, அவற்றை இயக்கி வருகிறார்கள்” என்று நம்மை அதிர வைத்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்