தறிகெட்ட தாதுமணல் கொள்ளை... விசாரணை வளையத்தில் வி.வி.மினரல்ஸ்! | Mineral Sand Robbery issue - v v minerals - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/04/2017)

தறிகெட்ட தாதுமணல் கொள்ளை... விசாரணை வளையத்தில் வி.வி.மினரல்ஸ்!

ஜூ.வி லென்ஸ்

மிழக அரசின் ஒட்டுமொத்த கடனையே அடைத்துவிட முடிகிற அளவுக்கு வளங்கள், திறந்த கடற்கரையில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அதிலிருந்து கோடிகளில் கிடைக்கும் வருமானம், சிலரின் கஜானாவுக்கு மட்டுமே போகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என சகல மட்டங்களிலும் இதற்கு ஆதரவு. ‘தாதுமணல் கொள்ளை’ என பரபரப்பாகப் பேசப்படும் இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

தமிழகத்தின் தென் மாவட்டக் கடற்கரைப் பரப்பில், கோடிகளை அள்ளித் தரும் கனிமங்கள் அடங்கிய மணல் கொட்டிக் கிடக்கிறது. கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் உள்ளிட்ட கனிமங்கள் அடங்கிய மணல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடலோரப்பகுதிகளில் பெரும் பரப்பில் உள்ளது. அங்கு புகுந்து விளையாடும் குறிப்பிட்ட சிலர், மிகப் பெரிய கோடீஸ்வரர்களாகவும், அசைக்க முடியாத ஆதிக்க சக்திகளாகவும் அரசியல் செல்வாக்கோடு வலம் வருகிறார்கள். 

‘‘குமரி மாவட்டத்தின் மிடாலத்தில் தொடங்கி, தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் வரை உள்ள சுமார் 150 கி.மீ நீளக் கடற்கரைதான், இந்தத் தொழிலின் முக்கியக் களம். தாது மணலில் இருந்து கார்னெட் உள்ளிட்ட தாதுக்களைப் பிரித்து எடுக்கும் தொழிலில், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் அதிபர் வைகுண்டராஜனின் குடும்பத்தினர் பல வருடங்களாகக் கோலோச்சி வருகின்றனர்’’ என்கிறார்கள், உள்விவரம் அறிந்தவர்கள்.