கோட்டையை உடைக்கும் தினகரன்! | TTV Dhinakaran speech mgr centenary celebrations in Madurai melur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/08/2017)

கோட்டையை உடைக்கும் தினகரன்!

ஆணவம்... ஃபோர்ஜரி... 420... தலைக்கனம்... மடியில் கனம்... அட்டைக்கத்திகள்...

மேலூர் திணறத் திணற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்டியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். எடப்பாடி அணி ஓங்கியப்பிறகு, தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் தினகரனுக்கு. சசிகலா குடும்பத்துக்கு இது வாழ்வா, சாவா யுத்தம். அதனால், உள்ளுக்குள் இருக்கும் பகைமை உணர்வுகளை ஒளித்துவைத்துக்கொண்டு ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றுசேர்ந்து மேலூரில் கவனத்தைக் குவித்தது. ஒரு நாள் முன்னதாகவே மேலூர் வந்துவிட்ட திவாகரன், எல்லா ஏற்பாடுகளையும் நேரில் பார்த்துத் திருப்தி அடைந்தார். ஜெயா டி.வி-யையும், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழையும் நிர்வகித்துவரும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனும் மேலூர் வந்து கட்சிக்காரர்களை முடுக்கி விட்டார். டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். மதுரை பப்பீஸ் ஹோட்டலைச் சசிகலா குடும்பமே வளைத்துப்போட்டதுபோல் தோற்றம் அளித்தது. ஹோட்டலைச் சுற்றி உளவுத்துறையினர் நோட்டமிட்டு, யார் யார் வருகிறார்கள் என நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க