டிபனும் இல்லை... மெடலும் இல்லை!

சென்னை மாரத்தான் குளறுபடி

‘சென்னை மாரத்தான்’ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பதைப் பலரும் பெருமையாக நினைப்பார்கள். அதிகாலை எழுந்து, ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க ஆர்வத்துடன் வருவார்கள் பலரும். அதற்காக, போக்குவரத்தையே மாற்ற வேண்டிய அளவுக்குக் கூட்டம் கூடும். ‘சென்னை ரன்னர்ஸ்’ என்ற அமைப்பு சார்பில் ‘விப்ரோ’ ஆதரவுடன் ஒவ்வோர் ஆண்டும் இது நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த பந்தயத்தில் பல குழப்பங்கள்.

டிசம்பர் 3-ம் தேதி சென்னை  ஓ.எம்.ஆர் சாலையில் நடந்த இந்த ஓட்டப்பந்தயத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பங்குபெற ஒவ்வொருக்கும் ரூ.975 கட்டணமாகப் பெறப்பட்டது. பந்தயத்தில் கலந்துகொள்பவர்களுக்கு டி-ஷர்ட், மெடல், காலை உணவு போன்றவற்றை வழங்க வேண்டும். ஆனால், ஆயிரக்கணக்கானோருக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்கப்பட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகை, ‘கோதுமை கேசரி, இட்லி பொடிமாஸ், வெண் பொங்கல், வெஜ் சாம்பார், கொள்ளுச் சட்னி, வேக வைத்த சுண்டல், காபி ஆகியவை வழங்கப்படும்’ எனப் பசியைத் தூண்டியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்