அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்

ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு மட்டும் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவித்து, பின் ரத்து செய்யப்பட்டபோது, அங்கு போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், மருதுகணேஷ், மதுசூதனன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். பி.ஜே.பி சார்பில் கரு.நாகராஜனும், சுயேச்சையாக நடிகர் விஷாலும் போட்டியிடுகின்றனர். அவர்கள் வேட்பு மனுக்களுடன் தாக்கல் செய்த சொத்து விவரங்களை ஒப்பீடு செய்தோம்.

கார் இல்லாத தினகரன்!


முதல்வராகும் கனவுடன், ஆர்.கே.நகரில் அ.தி.மு.க (அம்மா) அணி வேட்பாளராக  மார்ச் மாதம் களத்தில் குதித்த தினகரன் தாக்கல்செய்த பிரமாணப்பத்திரத்தில் சுவாரஸ்யமான பல தகவல்கள் இருந்தன. பணம் உள்ளிட்ட இவரது அசையும் சொத்துகளின் மதிப்பு 11,45,781 ரூபாய் 94 பைசா. மனைவி அனுராதாவின் பெயரில் உள்ள ரொக்கம், வங்கிக் கணக்கு இருப்பு உள்ளிட்டவற்றின் மதிப்பு 7,18,66,055 ரூபாய் 23 பைசா. மகள் பெயரில் உள்ள அசையும் சொத்து மதிப்பு 49,54,942 ரூபாய் 52 பைசா. தன் பெயரில் ரூ.57,44,008, மனைவி பெயரில் ரூ.2,40,71,687 மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. மகள் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை. தன் பெயரில் கார் உள்ளிட்ட எந்த வாகனமும் இல்லை. மனைவி பெயரில் 11.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டாடா சஃபாரி கார், ஜீப் உள்ளன என்று தெரிவித்திருந்தார்.

தினகரன் இப்போது சுயேச்சை வேட்பாளராகக் களம் காண்கிறார். தன் பெயரில் 16,73,799 ரூபாயும், மனைவி பெயரில் 6,87,21,524 ரூபாயும், மகள் பெயரில் 1,17,41,411 ரூபாயும் அசையும் சொத்துகள் உள்ளன என்று கூறியுள்ளார். மார்ச் மாதத்துக்கும், இப்போதைக்கும் இடையே தினகரனின் அசையும் சொத்து மதிப்பு சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மனைவி பெயரில் உள்ள சொத்துகளின் மதிப்பு 3 சதவிகிதம் குறைந்துள்ளது. மகள் பெயரில் உள்ள சொத்து மதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்