வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!

டெலிவரி மனிதர்களின் வாழ்க்கை

போஸ்ட்மேன் என்ற ஒருவர் மட்டுமே வீடு தேடிவந்த காலம் மாறிவிட்டது. இப்போது கூரியர், இ-காமர்ஸ் டெலிவரி, உணவு, காய்கறி, இறைச்சி என சகலத்தையும் நம் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்கிறார்கள். தினமும் இப்படி வரும் அந்நியர்கள் பற்றி என்றைக்காவது நாம் தெரிந்துகொண்டிருக்கிறோமா? ‘‘எப்படி இருக்கீங்க, தண்ணி குடிக்கிறீங்களா?” என்று அவர்களிடம் அக்கறையாக விசாரிப்பவர்கள் அரிது. இந்த டெலிவரி மனிதர்களின் பணி எப்படி இருக்கிறது?

வெங்கடேஷ், காஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்

‘‘அப்பார்ட்மென்ட் ஒன்றில் இரண்டாம் மாடியில் இருந்த கஸ்டமருக்கு சிலிண்டர் டெலிவரி கொடுக்கப் போனேன். செம மழை. தெரு நாய் ஒண்ணு, குளிர் தாங்காம ரெண்டாவது மாடிகிட்ட மாடிப்படியிலேயே படுத்திருந்துச்சு. நான் படியில வர்றதைப் பார்த்துட்டு, தலையைத் தூக்கி என்னை மொறச்சது. நான் நிக்காம வந்ததைப் பார்த்து, எழுந்து என்னை நோக்கி வந்துச்சு. பயந்து போய், சிலிண்டரை படிக்கட்டுலேயே வெச்சுட்டு கீழே வந்துட்டேன். கஸ்டமர் அந்த நாயை விரட்டி விட்டபிறகு, மேலே போய் சிலிண்டரை டெலிவரி கொடுத்தேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட, கிரீன்வேஸ் ரோட்டுல ஒரு வீட்டுக்குப் போனப்ப, ரெண்டு நாய்கள் ஒரே நேரத்தில ஓடிவந்து குரைச்சுது. சத்தம் கேட்டு கஸ்டமர் வந்து அதுகளைக் கூட்டிட்டுப் போயிட்டார். நாய்த் தொல்லை இப்போ பழகிடுச்சு.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, விடாம மழை பெஞ்சப்போகூட, நான் சிலிண்டர் டெலிவரி பண்ணியிருக்கேன். சில கஸ்டமர்கள், சிலிண்டரைக் கொண்டுபோன பிறகுதான், ‘ஏ.டி.எம்-ல பணம் எடுத்துத் தர்றேன்’பாங்க. வெயிட் பண்ணி வாங்கிட்டு வருவேன். சில வீடுகள்ல வயசானவங்க இருப்பாங்க. பணத்தை வெச்ச இடத்தை மறந்துட்டு, ‘எங்கோ வெச்சோம்னு தெரியலப்பா’ன்னு திண்டாடுவாங்க. சிலிண்டரைக் கொடுத்துட்டு, ‘பணத்தை அப்புறம் வந்து வாங்கிக்கிறேன்’னு சொல்லிடுவேன்.’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்