வாசலில் அந்நியர் ஜூனியர்: “பக்கத்து வீட்டுல இன்ஸ்பெக்டர் இருக்கார்...”

பலே பாதுகாப்பு டிப்ஸ்!

கல் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், விதம்விதமான நபர்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. வீட்டு வேலை பார்ப்பவர், வாட்டர் கேன் போடுபவர், கார் டிரைவர், துணி சலவை செய்பவர், எலெக்ட்ரிகல் - பிளம்பிங் வேலை செய்பவர், காய் - பழம் விற்பவர், டாய்லெட் க்ளீனிங் அயிட்டங்கள் விற்பவர், ஆன்லைன் மார்க்கெட்டிங் பொருள் டெலிவரி செய்பவர், கூரியர் சர்வீஸ் ஊழியர், ஜோசியம் சொல்கிற பெண், விளக்குமாறு விற்கும் பெண், அப்பார்ட்மென்ட்டைச் சுத்தம் செய்பவர், குப்பை சேகரிக்கும் ஊழியர், ஆன்மிகம் என்கிற போர்வையில் சீஸனுக்குத் தகுந்த மாதிரி நன்கொடை வசூலிக்கும் கும்பல், கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி வந்து கண்ணீர்விடும் பெண்கள், வயதான நிலையில் உதவி கேட்டு வருபவர்கள், அநாதை இல்லத்துக்கு உதவி கேட்டு வருபவர்கள், தங்கள் கம்பெனி பொருள் குறித்து சர்வே எடுக்கிறேன் என்று வருபவர்கள்... இப்படி தினம் தினம் எத்தனையோ நபர்கள் வருகிறார்கள்.

இவர்களில் பலர் நல்லவர்கள்; கிரிமினல்களும் அவர்களில் கலந்து இருப்பார்கள். அவர்களிடம் முன்னெச்சரிக்கையாக இருக்க சில டிப்ஸ்களைத் தருகிறார், சென்னை (கிழக்கு) இணை போலீஸ் கமிஷனர் மனோகரன்.

‘‘ஆண்கள் வேலைக்கும், குழந்தைகள் ஸ்கூலுக்கும் சென்றுவிடும் காலை பத்து மணி முதல் மாலை நாலு மணி வரை... இந்த நேரம்தான் திருடர்களின் டார்கெட் டயம். ‘வீட்டில் நாய் இருக்கிறதா, சி.சி.டி.வி கேமராக்கள் எங்கெங்கே உள்ளன, செக்யூரிட்டிகள் எப்போது ஷிப்ட் மாறுவார்கள்...’ இதையெல்லாம் முதலில் நோட்டமிடுவார்கள். இந்த விவரங்களைச் சேகரிக்காமல், எந்த கிரிமினலும் அட்டாக் செய்வதில்லை. அவர்களுக்குத் துப்புக் கொடுக்கிற நபர்களை ஏதாவது வியாபாரி போல நடமாடவிடுவார்கள். திருடர்களும் ஏதாவது ஒரு பொருள் விற்பவரைப்போலவே வட்டமடிப்பார்கள். இந்த நெட்வொர்க்கில் உள்ளவர்கள் கச்சிதமாகத் திட்டமிட்டுத் திருடுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!