வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”

வீட்டுக்கு வரும் டாக்டர்கள்

ழைய கறுப்பு - வெள்ளை படங்களில், கையில் ஒரு பெட்டியைத் தூக்கியபடி வீட்டுக்கே வந்து சிகிச்சை தரும் டாக்டர் கேரக்டர்களைப் பார்க்க முடியும். கறுப்பு-வெள்ளை படங்கள் போலவே, இப்படிப்பட்ட டாக்டர்களும் காணாமல் போய்விட்டார்கள். அந்த மரபை மீட்டுள்ளது, சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனின் முயற்சியில் உருவான ‘இல்லம் தேடிய சிகிச்சை’ என்ற அமைப்பு.

‘‘முதியவர்களை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல முடியாத சூழல் இருக்கும்போது, அதனால்கூட அவர்கள் உயிரிழந்துவிடுகின்றனர். இதுபற்றி மருத்துவ நண்பர்கள், மாணவர்கள்கிட்ட கோரிக்கை வெச்சேன். தாராளமா செய்யலாம்னு முன்வந்தாங்க” என்று இந்த அமைப்பின் உருவாக்கம் பற்றி உற்சாகமாகப் பேசுகிறார், டாக்டர் நடராஜன்.

‘‘சென்னையில்30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்தச் சேவையைச் செய்கிறார்கள். எந்த நேரம் அழைத்தாலும், மறுப்புச் சொல்லாமல் முதியவர்களின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சையளிக்கிறோம். வயதானவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு அழைத்துப் போவதால் காலதாமதம் ஆயிடும். அதைத் தவிர்க்கவே இந்தமுறை.இதுவரை 6000-க்கும் மேற்பட்ட முதியவர்களைக் காப்பாற்றியுள்ளோம். வீடுகளுக்கு மட்டுமின்றி, முதியோர் இல்லங்களுக்கும் போய் ட்ரீட்மென்ட் பண்றோம்.

வீடுகளுக்குப் போய் ட்ரீட்மென்ட் பண்ணும்போது ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க. பாதிப் பிரச்னைகள் அதிலேயே சரியாகிடும். அலோபதி மருத்துவர்கள் மட்டுமின்றி, இயற்கை மருத்துவர், ஹோமியோபதி மருத்துவர்களும் இந்த அமைப்பில் இருக்காங்க. இந்தத் திட்டத்தோட அடுத்தகட்டமாக, ஆதரவில்லாத முதியவர்களின் வீடுகளுக்குப் போய் அவர்களுக்கு உணவு  கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். முதியவர்களுக்கு அவர்கள் வயதுக்கேற்ற உணவுகளைச் சாப்பிடாததால் பல நோய்கள் வருது. அதைத் தவிர்க்கவே இந்த முயற்சி. இப்போ திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் உள்ள முதியவர்களுக்கும் இந்த அமைப்பின் கீழ் சிகிச்சை அளிக்கிறோம்’’ என்கிற நடராஜன், ‘‘இதுபோன்ற திட்டத்தை அரசே எல்லாப் பகுதிகளிலும் தொடங்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்