உலக வரைபடத்தை மாற்றுமா ஜெருசலேம்?

‘‘இது, ஓர் உண்மையை அங்கீகரிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதைச் செய்தே ஆக வேண்டும்’’ என்று சொல்லிவிட்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பு, உலக வரைபடத்தில் சில தேசங்களின் எல்லைகளையே மாற்றிவிடும் வல்லமை படைத்தது. ‘ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அமெரிக்கா ஏற்றுக்கொண்டது’ என்பதுதான் அந்த அறிவிப்பு.

‘‘உலகெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் கொந்தளிப் பார்கள்’’ என்கின்றன சில திருச்சபைகள். ‘‘இந்த அறிவிப்பு, நரகத்தின் வாயிலை அமெரிக்காவுக்குத் திறந்துவிட்டிருக்கிறது’’ என்கிறது ஹமாஸ் அமைப்பு. ‘‘மரணத்தை முத்தமிடுகிறது அமெரிக்கா. 150 கோடி முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் அறிவிப்பு செய்திருக்கிறார் ட்ரம்ப்’’ என்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். தங்களுக்குள் அடித்துக்கொண்டு பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய தேசங்கள், இப்போது அமெரிக்காவுக்கு எதிராக ஒன்றுதிரண்டிருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்