அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க? | Internal fight of madurai DMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/06/2017)

அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க?

தி.மு.க துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமியை, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி அவமதித்த விவகாரம் மதுரையில் பூதாகரமாக வெடித்துள்ளது.

மு.க.அழகிரியும் அவருடைய ஆதரவாளர்களும் தென்மாவட்ட தி.மு.க-விலிருந்து மட்டுமல்ல... மதுரை மாநகர தி.மு.க-விலிருந்தும் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள். ஆனால், இப்போது ஸ்டாலின் ஆதரவாளர்களாகச் செயல்பட்டுவரும் தி.மு.க நிர்வாகிகளுக்குள் கோஷ்டி மோதல் தொடர்ந்து நடக்கிறது. புறநகர் மாவட்ட அளவில் இரண்டாகவும், மாநகர அளவில் இரண்டாகவும் மதுரையைப் பிரித்து, தற்போது நான்கு மாவட்டச் செயலாளர்கள் மதுரை தி.மு.க-வை வழிநடத்துகிறார்கள். இதில் மதுரை மாநகரத் தெற்கு மாவட்டச் செயலாளராக கோ.தளபதி இருக்கிறார். அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்து, ஸ்டாலின் அணிக்கு மாறியவர் இவர். இவருக்கும் கட்சி நிர்வாகி களுக்கும் ஆரம்பத்திலிருந்து சரிபட்டு வரவில்லை. ‘‘கட்சிக்காகச் செலவு செய்வதில்லை. ஆளும்கட்சிக்கு எதிராக எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. அ.தி.மு.க-வின் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோருடன் தொழில்ரீதியாக இணைந்து செயல்படுகிறார். அ.தி.மு.க-வோடுதான் அவர் கூட்டணியில் இருக்கிறார்’’ என்று தி.மு.க-வினர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கூறிவரும் நிலையில், சமீபத்தில் மதுரை ஆரப்பாளையத்தில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் ஐ.பெரியசாமியை, கோ.தளபதி அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க