நீட் தேர்வு... நிஜம் என்ன? | what is Reality of NEET examination - Junior Vikatan | ஜூனியர் விகடன்

நீட் தேர்வு... நிஜம் என்ன?

ருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிந்த பின்னும், அந்தத் தேர்வு குறித்த சர்ச்சைகள் உயிர்ப்புடன் உள்ளன. ‘ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொருவிதமான கேள்வித்தாளை உருவாக்கியது ஏன்’ என்ற கேள்வியை எழுப்பி, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளித்தது. இன்னொரு பக்கம் இது சட்டமன்ற கூட்டத்தொடரிலும் விவாதப் பொருளாகி இருக்கிறது. ‘நீட் தேர்வு விவகாரத்தில் அரசின் கொள்கை என்ன?’ என தி.மு.க எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பின்பற்றிய கொள்கைதான் இந்த அரசின் கொள்கை. நீட் தேர்வு வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” எனப் பதிலளித்துள்ளார். மாநில அரசு நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும்போது, மத்திய அரசு அதை இந்தியா முழுக்க அமல்படுத்துவதில் தீவிரமாக இயங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick