ரேஷன் கடை இனி இருக்குமா? | Ration shop issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ரேஷன் கடை இனி இருக்குமா?

லகிலேயே அதிக ஏழைகளைக் கொண்ட நாடு இந்தியா. தினமும் 20 கோடி இந்தியர்கள் இரவு உணவு கிடைக்காமல் பட்டினியோடு தூங்கப் போகிறார்கள். போதிய ஊட்டச்சத்து இல்லாமல் ஐந்து வயதுக்குள்ளாக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையிலும் இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது.

பெரும்பாலான இந்தியர்களுக்கு ஜீவாதாரமாக இருப்பது ரேஷன் கடைகள்தான். குறைந்த விலையில் அங்கே கிடைக்கும் அரிசியும் பருப்பும்தான் பல வீடுகளில் அடுப்பெரியக் காரணம். இப்போது அந்த நியாய விலைக் கடைகளில் கைவைத்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கப் பார்க்கின்றன மத்திய, மாநில அரசுகள். ‘விரைவில் ஒரு கோடி ரேஷன் கார்டுகள் செல்லாததாக ஆக்கப்படும்’ என்ற தகவலை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ரேஷன் கடைகளுக்கே மூடுவிழா நடத்தும் வேலையை மிக வேகமாகச் செய்கிறது அரசு. உள்தாள் ஒட்டுவதில் குழப்பம், ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் தாமதம், ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு, மத்திய அரசு வழங்கி வந்த அரிசியின் விலை அதிகரிப்பு, சர்க்கரைக்கான மானிய நிறுத்தம், பருப்பு கொள்முதலுக்கான டெண்டர் கோராதது, உணவு பாதுகாப்புச் சட்ட செயலாக்கம் என ‘ரேஷன் கடை மூடப்படும்’ என்ற பீதியை நிஜமாக்கும் வகையிலேயே மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இருக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick