“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!” | R K Nagar constituency voters comments on ADMK Government - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/10/2017)

“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!”

ஆர்.கே.நகர் வாக்காளர்கள் ஆவேசம்

ஓர் இடைத்தேர்தல், ஒரு பொதுத்தேர்தல், ஓர் இடைத்தேர்தல் ரத்து எனக் கடந்த மூன்றாண்டுகளாக அதகளப்படுகிறது, ஆர்.கே.நகர் தொகுதி.

ஆர்.கே.நகரின் எம்.எல்.ஏ-வான ஜெயலலிதா இறந்துவிட்டதால், ஆறு மாதங்களுக்குள் அந்தத் தொகுதிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத் ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வருமானவரித் துறை ஆவணங்களைக் கைப்பற்ற... இடைத்தேர்தல் ரத்தானது.

‘ஆர்.கே. நகரில் தேர்தல் நடத்தும் சூழல் வந்ததும் தேர்தல் நடத்தப்படும்’ என முன்பு சொல்லியிருந்த தேர்தல் ஆணையம், இப்போது, ‘டிசம்பர் 31-க்குள் தேர்தல் நடத்தப்படும்’ என அறிவித்திருக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதி எப்படி இருக்கிறது... தொகுதி மக்களின் மனநிலை என்ன? என்பதை அறிந்துகொள்ள தொகுதிக்குள் வலம்வந்தோம்.

தண்ணீருக்காக குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள், குவிந்துகிடக்கும் குப்பைகள், நாற்றமெடுக்கும் கால்வாய்கள் என ஆர்.கே.நகருக்கே உரிய அடையாளங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லை.