சிதைக்கப்படும் தஞ்சைப் பெரியகோயில்!

கட்டுமானங்கள்... ஆழ்துளைக் கிணறு... வழிபாட்டு முறை மாற்றம்!

லக கட்டடக்கலை நிபுணர்களையெல்லாம் தலை உயர்த்திப் பார்க்கவைத்து, வியப்பில் ஆழ்த்துகிறது தஞ்சைப் பெரிய கோயில். இதன் சதய விழா, வரும் 29, 30-ம் தேதிகளில் நடக்கவிருக்கிறது.

ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பெரியகோயிலின் வழிபாட்டுமுறைகள் திட்டமிட்டு மாற்றப்படுவதாகவும், கோயில் கட்டுமானங்கள் சிதைக்கப்படுவதாகவும் அதிர்ச்சி கிளப்புகிறார்கள் தொன்ம  கட்டடக்கலை நிபுணர்கள்.

கோயில் கட்டடக் கலைஞரும் ஆய்வாளருமான தென்னன் மெய்ம்மன், “தஞ்சைப் பெரியகோயில், பழந்தமிழர்களின் கட்டுமானத் திறனுக்கும், வழிபாட்டு முறைகளுக்கும் சான்றாக மிஞ்சியிருக்கும் அடையாளம். இந்த அடையாளத்தை அழித்துவிட்டால் தமிழர்கள், பெருமை பேச முடியாது என நினைக்கிறார்கள்.இக்கோயிலை வலுவிழக்கச் செய்வதற்கான வேலைகள் தொடர்ந்து நடக்கின்றன. 2010-ல் பெரிய கோயில் விமானத்தின் மிக அருகில், 350 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டியிருக்கிறார்கள். 1000 ஆண்டுகால  உலகப் பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒரு கோயிலின், விமானத்திலிருந்து 100 அடிக்குள் ராட்சத எந்திரத்தை வைத்து 350 அடி ஆழத்தில் போர் போடுவது எவ்வளவு விபரீதம்?

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick