கிருபாநிதியை மறந்த தி.மு.க! | BJP former State President Dr Kirubanidhi passed away - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/10/2017)

கிருபாநிதியை மறந்த தி.மு.க!

“நான் தி.மு.க-வில் சேர்ந்துவிட்டேன். என் தலைவராக கலைஞரை ஏற்றுக்கொண்டுவிட்டேன். இதுதான் உண்மை” என்று பி.ஜே.பி அலுவலகத்திலேயே, அந்தக் கட்சியின் தலைவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே, பத்திரிகையாளர்கள் முன்பு துணிச்சலாகச் சொன்னவர் பி.ஜே.பி-யின் முன்னாள் மாநிலத் தலைவரான டாக்டர். கிருபாநிதி. இவர், தன் 90-வது வயதில் அக்டோபர் 20-ம் தேதி காலமானார்.

தமிழக பி.ஜே.பி-யில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கிருபாநிதி, தமிழக பி.ஜே.பி-க்கு நியமிக்கப்பட்ட ஒரே தலித் தலைவர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பிரபல அறுவைச் சிகிச்சை நிபுணர். 2000-2003 வரை தமிழக பி.ஜே.பி-யின் தலைவராக இருந்தபோதுதான், 2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் பி.ஜே.பி கூட்டணி வைத்தது. பி.ஜே.பி-க்கு 23 தொகுதிகளை தி.மு.க ஒதுக்கியது.