“நான் உயிரோடு இருக்கேனான்னு பார்க்கவே மக்கள் வர்றாங்க!” | Dindigul Leoni interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/10/2017)

“நான் உயிரோடு இருக்கேனான்னு பார்க்கவே மக்கள் வர்றாங்க!”

லியோனி கலகல

லியோனி என்றால் ஜாலி. அவர் அடித்த ஜோக்குகள் வாட்ஸ் அப்பில் கொட்டிக் கொண்டே இருக்கும். கூடவே,  ‘லியோனி விபத்தில் சிக்கினார்’ என்ற வதந்தியும். அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் பட்டிமன்றம், தி.மு.க மேடைகள் எனக் கலக்கிவருகிறார், லியோனி. அவரிடம் பேசினோம்.

 ‘‘சமீபத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்தீர்களே?”

“நான் எப்பவும் மாசம் ஒரு முறை கோபாலபுரம் வீட்டுக்குப் போய் தலைவரைப் பார்த்துட்டு வருவேன். கடைசியா போனபோது, பேரன் அருள்நிதியின் மகனைப் பார்த்து தலைவர் சிரிச்சிக்கிட்டு இருந்தார். அதை, என் மனைவி செல்போனில் படம் எடுத்தார். தலைவர் பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டே இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு, ‘கிளம்புறேன்யா’னு சொன்னேன். அவர் கண்ணுல தண்ணி தேங்கி நின்னுச்சு. அவர், என் மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்கார்னு உணர முடிஞ்சது.”

‘‘கருணாநிதி, முரசொலி அலுவலகத்துக்கு வந்து பார்வையிட்டுப் போயிருக்கிறாரே?”

“அந்தச் செய்தியைக் கேட்டவுடனே ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. இப்படி அவர் நிச்சயம் மீண்டு எழுந்து வருவார்னு எதிர்பார்த்தேன். இப்போ தலைவர், பேக் டு ஃபார்ம். நான் அவரைப் பார்க்கும்போது அவர் கண்ணில் ஒரு ஏக்கம் இருந்திச்சு. மீண்டும் மேடை ஏறுவார். ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே...’னு அவருடைய குரலை மக்கள் சீக்கிரம் கேட்பாங்க .”

நீங்க எப்படி பீல் பண்றீங்க