பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை | GST for snake poison - Horrible and cruel - Says tribal people - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/11/2017)

பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை

பாம்புகளைப் பிடித்து அவற்றின் விஷத்தைச் சேகரிக்கும் பழங்குடி இருளர்கள், ஒவ்வொரு நாளும் மரணத்தின் வாசலுக்குச் சென்றுவருகிறார்கள். இவர்கள் சேகரிக்கும் விஷம்தான், பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்க உதவுகிறது; பாம்புக் கடிக்கு ஆளாகும் மக்களைக் காப்பாற்றுகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு, பாம்பு விஷத்துக்கும் ஜி.எஸ்.டி வரியைப் பிடுங்குவது, நாகப்பாம்பின் விஷத்தைவிடக் கொடூரமானது.

வறுமையில் தவிக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வழி ஒன்றைக் கண்டுபிடித்தார், இயற்கை ஆர்வலரும் பாம்பு ஆராய்ச்சியாளருமான ரோமுலஸ் விட்டேகர். அதுதான், பாம்புகளிடமிருந்து விஷம் எடுப்பது. பாம்புகளின் விஷம் மதிப்புமிக்க ஒரு பொருள். அதை, மிகக்குறைந்த அளவில் குதிரைகளின் உடலில் செலுத்தி, அதில் உருவாகும் எதிர்ப்புப் பொருள்களைச் சேகரிக்கிறார்கள். அதிலிருந்தே விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க