“எடப்பாடியும் பன்னீரும் என் பினாமிகள்தான்!” - தினகரன் ‘தில்’ பேட்டி

‘‘எங்களின் உண்மையான பினாமிகளை விட்டுவிட்டு, ஒன்றும் இல்லாதவர்களைப் பிடித்து ரெய்டு நடத்துவது எந்த வகையில் நியாயம்?’’ எனச் சிரித்தபடியே சீறுகிறார் டி.டி.வி.தினகரன். மொத்தக் குடும்பமும் ரெய்டில் சிக்கிய நிலையில், தைரியமாக வெளியில் வந்து பேசிய தினகரன், ‘தில்’கரனாக தன்னை நிரூபித்தார். தினகரனை மட்டும் விட்டுவிட்டு, அவரைச் சுற்றிலும் இருப்பவர்களைச் சீண்டியது ரெய்டு வியூகம். தினகரனைப் பயமுறுத்தும் தந்திரமாகவே இதைப் பார்க்கிறார்கள். 1,850 அதிகாரிகள் 187 இடங்களில் ரெய்டு நடத்திக்கொண்டிருந்தபோது, கோ பூஜையில் ஈடுபட்டிருந்தார் தினகரன். ரெய்டு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க... இன்னொரு பக்கம் கூலாக கோயில்களுக்குச் சென்று திரும்பிய தினகரனை அவரது அடையாறு வீட்டில் சந்தித்தோம். புன்னகையுடன் இயல்பாகப் பேசினார்....

‘‘இந்த ரெய்டை எதிர்பார்த்தீர்களா?’’

‘‘வஞ்சம் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், இந்தளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை அல்ல இது; அவர்களது வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு. எங்கள் குடும்பத்தை ஒழிக்கவேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே எண்ணம். கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமானால், எங்கள் சொந்தங்களின் வீடுகளுக்கு வந்திருக்கக் கூடாது. உண்மையிலேயே எங்களின் பவர்ஃபுல் பினாமிகள் யார் தெரியுமா? எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்தான். அவர்களின் வீடுகளில்தான் ரெய்டு நடத்தியிருக்க வேண்டும். கடந்த ஆட்சியிலும், இப்போதைய ஆட்சியிலும் அவர்கள்தானே பவர்ஃபுல்லாக இருக்கிறார்கள். இவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 31 அமைச்சர்களும் எனக்கு வேண்டியவர்கள்தான். எங்களால்தான் இவர்கள் பதவியில் அமர்ந்தார்கள். அரசாங்கத்தில் நாங்கள் ஏதாவது காரியம் சாதிக்க வேண்டுமானால், இவர்கள்தானே செய்திருக்க வேண்டும்? அப்படியானால், இவர்கள்தானே எங்களின் பினாமிகளாக இருக்க முடியும்? இந்த உண்மையான பினாமிகளை விட்டுவிட்டு, மற்றவர்களை ரெய்டு செய்வதில் என்ன நியாயம் உள்ளது?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick