ஐ.நா-வில் ஒலித்த தமிழ்க் குரல்கள்!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36-வது கூட்டத்தில் தமிழர்களின் குரல் சற்று ஓங்கியே ஒலித்தது.

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு நடந்துவரும் தொடர் போராட்டங்களையடுத்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. ராஜபக்சே அரசும் அடுத்துவந்த மைத்திரிபால சிறீசேனா அரசும் மனித உரிமைகள் தொடர்பாக ஐ.நா-வுக்கு அளித்த உறுதிமொழிகளைக் காற்றில் பறக்கவிட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick