“இந்த மண்ணில் எதையும் இழப்போம்... ஆனால், மண்ணை இழக்கமாட்டோம்!”

வைரமுத்துவின் நியூட்ரினோ பேச்சு

‘‘ஒரு லட்சியப் பொருண்மைக்காக, தேனி நெடுவீதியில் குவிந்திருக்கின்ற என் அருமை தமிழ்ச் சொந்தங்களே...’’ எனப் பேச ஆரம்பித்தார் கவிஞர் வைரமுத்து. வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்புத் தொடர் நடைப்பயணத்தின் நான்காவது நாள் நிறைவாக, தேனி பங்களாமேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் அது. இரவு மணி 8.15.

‘‘இந்தக் கூட்டத்தில் நான் கொஞ்சம் விஞ்ஞானம் பேசப்போகிறேன். இந்த நியூட்ரினோ என்பது ஓர் அடிப்படைத் துகள். புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் போல நியூட்ரினோ என்பது ஓர் அடிப்படைத் துகள். இப்போது, கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் உங்கள் உடம்புக்குள் புகுந்து உங்களை அறியாமல் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. ஒரு பென்சில் வைக்கிற புள்ளியில், அல்லது தாய் தன் குழந்தையின் கன்னத்தில் வைக்கிற திருஷ்டிப்பொட்டில் இரண்டு லட்சம் கோடி நியூட்ரினோக்கள் இருக்கின்றன. இந்த அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்க முடியாது. மேற்குலகம், தென்கிழக்கு ஆசிய உலகம், இப்போது இந்தியா போன்ற இடங்களில் முயற்சிகள் நடக்கின்றன. இந்த அடிப்படைத் துகளைக் கண்டறிந்தால், பிரபஞ்ச ரகசியத்தைக் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த அடிப்படைத் துகளைக் கண்டறியத் தான் அம்பரப்பர் மலை, ஒரு சல்லடையாகப் பயன்பட இருக்கிறது. இந்த மலைச்சல்லடை முதலில் குடையப்படுகிறது. உள்ளே 51 ஆயிரம் டன் இரும்பு மின்காந்தமூட்டப்படுகிறது. இந்த மின்காந்தத்தைக் குளிரூட்ட எவ்வளவு தண்ணீர் தேவை என்ற வெள்ளை அறிக்கையை இதுவரை இவர்கள் வெளியிடவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்