சினிமா ஸ்டிரைக்கில் யாருக்கு நஷ்டம்?

45 நாள் போராட்டம்... ரூபாய் 300 கோடி இழப்பு...

திரைப்படத் தயாரிப்பாளர்கள் மார்ச் 1-ம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் சோகமான 50-வது நாளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதில் முடிவை எட்டுவதற்கு முனைப்பைக் காட்டிவருகிறது, தயாரிப்பாளர்கள் சங்கம். என்ன பிரச்னை, என்ன தீர்வு?

க்யூப் நிறுவனத்திலிருந்தே தொடங்குவோம். தமிழ் சினிமாவில் 2005-ல் அறிமுகமானது டிஜிட்டல் தொழில்நுட்பம். டிஜிட்டல் முறையில் திரையிடப்படும் இந்த வகை புரொஜெக்டர்களின் விலை 1,20,000 அமெரிக்க டாலராக இருந்தது. படிப்படியாக விலை குறைந்து, இப்போது இதன் விலை 60,000 அமெரிக்க டாலர். இந்தியாவில் இறக்குமதி செய்யும்போது, இதன் விலை 78,000 டாலர். அதாவது, சுமார் 50 லட்சம் ரூபாய். பயன்பாடு தெரியாது என்பதாலும், அதிக விலை என்பதாலும், ஆரம்பத்தில் இதைத் தமிழகத் திரையரங்குகள் வரவேற்கவில்லை. இதனால் ‘க்யூப் நிறுவனமே திரையரங்குகளுக்குத் தங்கள் முதலீட்டில் புரொஜெக்டர்களை வாங்கிப்போட்டுவிட்டு, வி.பி.எஃப் (Virtual Print Fee) என்ற கட்டணத்தைத் தயாரிப்பாளர்களிடம் வசூலித்துக்கொள்ளலாம்’ எனத் தயாரிப்பாளர் சங்க ஒப்புதலுடன் முடிவெடுக்கப்பட்டது. தியேட்டர்களும் டிஜிட்டல் முறையில் திரையிடலைத் தொடங்கின. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்