மின்மோட்டார் ஊழல்... களிமண் மாத்திரை! - சிவகங்கை சர்ச்சை

ரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக உயர் அதிகாரிகள் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊராட்சிகளில் மின் மோட்டார் மற்றும் குளோரின் மாத்திரைகள் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபற்றிய ஆதாரங்களுடன் தமிழக அரசுக்குப் புகார் அனுப்பியுள்ளார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட கன்வீனர் சின்னதுரை. அவரிடம் பேசினோம்.

“சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்றியங்களில் ஆய்வு செய்ததில், மாவட்டம் முழுக்கவே மின் மோட்டார்கள், குளோரின் மாத்திரைகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சந்தை விலையைவிட பல மடங்கு கூடுதல் விலைக்கு நீர்மூழ்கி மோட்டார்கள் வாங்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 73 மோட்டார்கள் ரூ.28,18,634-க்கும், உதிரிபாகங்கள் ரூ.15,26,040-க்கும் வாங்கப்பட்டுள்ளன. சிவகங்கையில் 86 மோட்டார்கள் ரூ.26,89,779-க்கும், தேவகோட்டையில் 106 மோட்டார்கள் ரூ.37,10,932-க்கும், உதிரிபாகங்கள் ரூ.14,71,680-க்கும் கொள்முதல் செய்துள்ளனர். இந்த மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் மட்டும் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்