BID - ஆன்லைன் டெண்டர் அட்ராசிட்டி! | Online Tender Atrocities in Tamil Nadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

BID - ஆன்லைன் டெண்டர் அட்ராசிட்டி!

அட்வான்ஸ் கமிஷன்... அட்ஜஸ்ட்மென்ட் விதிகள்... அமைச்சர் சொன்னால் கான்ட்ராக்ட்...

முட்டை மற்றும் பருப்பு டெண்டர் எடுத்த கிறிஸ்டி குழும நிறுவனங்களில் ரெய்டு... நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் எடுத்த எஸ்.பி.கே நிறுவனங்களில் ரெய்டு... தமிழகத்தை கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் உலுக்கிய இந்த வருமானவரித் துறை ரெய்டுகளில் அரசியல் மற்றும் அதிகாரத் தொடர்புகள் கவனிக்கப்பட்டன. கிறிஸ்டி நிறுவன ரெய்டின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களை எடுக்கும் எஸ்.பி.கே நிறுவனத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்கள் தொடர்பில் இருக்கின்றனர்.

ஆனால், இந்த ரெய்டுகள் குறித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘இப்போது எல்லாமே ஆன்லைன் டெண்டர்தான். இதில் எந்தவித முறைகேடு நடப்பதற்கும் வாய்ப்பே கிடையாது” என்றார்.

முதல்வர் சொல்வதுபோலத்தான் ஆன்லைனில் வெளிப்படையான டெண்டர்கள் நடக்கின்றனவா?

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சித் துறை, மின்துறை... இந்த நான்கு துறைகளில்தான் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் விடப்படுகின்றன. முதல்வர் சொல்வதுபோல் ஆன்லைனில்தான் பல டெண்டர்கள் விடப்படுகின்றன. ‘‘இவை ஆன்லைன் டெண்டர் மாதிரிதான். ஆனால், ஆன்லைன் டெண்டர்கள் அல்ல’’ என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick