மேட்டூர் தண்ணீரால் சேலத்துக்குப் பயனில்லை... எடப்பாடியையே கண்டுகொள்ளாத எடப்பாடி!

மேட்டூர் அணை நிரம்பி, காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு தமிழக மக்கள் பூரித்துப்போயிருக்கிறார்கள். மேட்டூர் அணை கட்டப்பட்டு 84 ஆண்டுகளாகும் நிலையில், 39-வது முறையாக அணை நிரம்பியுள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. கடல்போல் காட்சியளிக்கும் காவிரியை, 16 கண் பாலம் வழியாகத் தினமும் கண்டுகளிக்கிறார்கள் ஆயிரக்கணக்கான மக்கள்.

ஆனால், சேலம் மாவட்ட விவசாயிகள் இந்தக் காட்சியைக் கண்டு பதறுகிறார்கள். ஏன்? ‘‘மேட்டூர் அணை சேலத்தில் இருந்தாலும், எங்களுக்கு அது உதவுவதில்லை. எப்போதாவது நிரம்பும் மேட்டூர் அணையிலிருந்து உபரிநீரை சேலம் மாவட்டத்துக்கு உரிய முறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்காமல், அதைக் கடலில் கலக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் ஆட்சியாளர்கள்’’ என்று வேதனையுடன் சொல்கிறார்கள் சேலம் விவசாயிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick