சொத்துக்குவிப்பு வழக்கு... ஜெ. போல சிக்கும் ஓ.பி.எஸ்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 21 ஆண்டுகாலக் கொடுங்கனவாகத் தொடர்ந்தது சொத்துக்குவிப்பு வழக்கு. தி.மு.க ஆட்சிக் காலத்தில், தன்மீது தொடரப்பட்ட அத்தனை வழக்குகளையும் உடைத்த ஜெயலலிதாவால், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து மரணத்துக்குப் பிறகும் விடுதலை பெற முடியவில்லை. அதேபோன்ற ஒரு கடும் வெள்ளத்தில் சிக்கிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த வெள்ளத்தின் முதல் சுழலில் தப்பிய ஓ.பி.எஸ்., இரண்டாவது சுழலில் வசமாகச் சிக்கியிருக்கிறார். ரெய்டுகள் சூழ்ந்த ஜூலை மாதத்தில், ‘ஏன் இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேட்டு, ஓ.பி.எஸ் மீதான புகாரை, அவர் துணை முதல்வராக அங்கம் வகிக்கும் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககமே விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பி.எஸ்., வருவாய்த் துறை அமைச்சராகப் பதவியேற்றார். டான்சி வழக்கில் சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டதால், ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், தமிழ்நாட்டின் திடீர் முதல்வர் ஆனார் ஓ.பி.எஸ். பிறகு, மீண்டும் ஜெயலலிதா முதல்வராக ஆன பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பி.எஸ் பதவிவகித்தார். 2006-ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில், ஓ.பி.எஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick