மிஸ்டர் கழுகு: உருகும் உணர்வு நிமிடங்கள்!

ள்ளிரவில் கழுகாரிடமிருந்து போன். ‘‘கோபாலபுரத்தில் இருக்கிறேன்’’ என்றார் சுருக்கமாக. பின்னணியில் சைரன் ஓசைகள் ஒலித்து, நிலவரத்தை உணர்த்தின.

‘‘சொல்லுங்கள்’’ என்றோம்.

‘‘ஜூலை 26-ம் தேதி கோபாலபுரமே தி.மு.க தொண்டர்களின் உணர்வுக்குவியலில் தத்தளித்தது. ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு கூடிக்கொண்டிருந்தது. கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக எழும் வதந்திகளை மறக்கடிக்கச் செய்வதற்காக ஸ்டாலின் ஒரு விஷயத்தைச் செய்தார். 1969 ஜூலை 27-ம் தேதி தி.மு.க-வின் முதல் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். தொடர்ச்சியாக அந்தத் தலைவர் பொறுப்பில் உள்ள அவர் 49 ஆண்டுகள் நிறைவு செய்து, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த ஜூலை 27-ம் தேதி இந்த பொன்விழாவைக் கொண்டாடுமாறு ஸ்டாலின் அழைப்புவிடுத்தார். ஆனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து 26-ம் தேதி மாலை ஏழு மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை, நிலைமையையே தலைகீழாக மாற்றிவிட்டது.’’

‘‘ஏன் இந்த அறிக்கை?’’

‘‘கருணாநிதியின் உடல்நிலை குறித்து பலரும் விசாரிக்க ஆரம்பித்ததுதான் இந்த அறிக்கை வெளியாகக் காரணம். நேரில் வந்து பார்க்கலாமா என தலைவர்கள் பலர் ஸ்டாலினுக்கு போன் செய்து கேட்டனர். இதனால்தான் இப்படி ஓர் அறிக்கையை வெளியிடச் சொன்னார் ஸ்டாலின். ஆனால், அதுவே பரபரப்பை ஏற்படுத்தி, பல தலைவர்களை கோபாலபுரத்துக்கு வரவழைத்துவிட்டது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick