கருணாநிதி குடும்ப டிஸ்கஷன்! | Karunanidhi family members meeting - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கருணாநிதி குடும்ப டிஸ்கஷன்!

தி.மு.க-வின் பொதுக்குழுவை ஜனநாயகத்தின் விளைநிலம் என்பார்கள். அதிகம் அறியப்படாத ஒரு பொதுக்குழு உறுப்பினர்கூட, மாநில நிர்வாகியைக் கேள்வி கேட்கலாம். தலைமையின் செயல்பாடுகளில் இருக்கும் குறைகளை விமர்சனம் செய்யலாம். எல்லாவற்றுக்கும் பொறுமையாக விளக்கம் தருவார் கருணாநிதி. அவரின் உரை, மாற்றுக்கட்சியினராலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு தி.மு.க பொதுக்குழுவுக்குக் கருணாநிதி போகவில்லை. கருணாநிதி உடல் நலிவுற்றிருந்ததால், இந்தக் கூட்டத்தில்தான் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லா அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், இரண்டு முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க பொதுக்குழு கூட்டப்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க பொதுக்குழு கூடியிருக்க வேண்டும். ஆனால், கருணாநிதியின் உடல்நிலையைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையத்தில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால், கடந்த ஆறு மாத காலமாக பொதுக்குழு கூட்டப்படவில்லை. இந்த நிலையில், ஆகஸ்ட் 19-ம் தேதி தி.மு.க பொதுக்குழு கூட இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick