எடப்பாடியால் அவமானப்பட்ட பன்னீர்!

‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்பதை, ஜூலை 23-ம் தேதி மேற்கொண்ட திடீர் டெல்லி பயணம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உணர்த்தியிருக்கிறது.

‘பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி போகிறார் பன்னீர். முக்கியமான சந்திப்புகளை நிகழ்த்துகிறார்’ என்ற செய்திகளை, அவர் விமானம் ஏறுவதற்கு முன்பாகவே சேனல்கள் ஒளிபரப்ப ஆரம்பித்தன. அடுத்தடுத்து ரெய்டுகள் நடந்த சூழலில் பன்னீர் டெல்லி கிளம்பியதால், முதல்வர் எடப்பாடிக்கும் அவருக்குமான மோதல் குறித்த தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால், ‘‘டெல்லியில் பன்னீரை அவமானப்படுத்த இதைச் சரியான சந்தர்ப்பமாக எடப்பாடி பயன்படுத்திக் கொண்டார்’’ என்கிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள்.

ஜூலை 23 திங்கள்கிழமை இரவு கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் சகிதமாக டெல்லி வந்த பன்னீரை, முதல்வருக்கு இணையாக விமான நிலையத்திலேயே மைத்ரேயன் உள்ளிட்ட எம்.பி-க்கள் மலர்க்கொத்துகளுடனும் சால்வைகளுடனும் வந்து வரவேற்றனர். நேராக தமிழ்நாடு இல்லம் வந்தவர், இரவு விருந்துக்கு மைத்ரேயன் வீட்டுக்குச் சென்றார். அன்று வேறு எந்தச் சந்திப்புகளும் நடைபெறவில்லை. ‘‘அமித் ஷாவைச் சந்திப்பதாக எந்தத் திட்டமும் இல்லை. ஆனால், ‘பன்னீரைப் பார்க்க அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை’ என்று எடப்பாடி ஆதரவாளர்கள் சிலர் வதந்தி கிளப்பினார்கள்’’ என்று பன்னீர் ஆதரவு எம்.பி-க்கள் சிலர் புலம்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick