அறிவாலயத்தை ஆக்கிரமித்த ஆக்டோபஸ்கள்! - களம் இறங்கிய ஸ்டாலின் | Stalin action on DMK office Anna Arivalayam - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/07/2018)

அறிவாலயத்தை ஆக்கிரமித்த ஆக்டோபஸ்கள்! - களம் இறங்கிய ஸ்டாலின்

“ஆட்சியில் தி.மு.க இருந்தாலும் இல்லா விட்டாலும், அண்ணா அறிவாலயம் எப்போதும் பரபரப்பாகவே செயல்படும். ஆனால், இப்போது அங்கு ஓர் அமைதி நிலவுகிறது. செயல்தலைவர் ஸ்டாலின் சுழற்றிய சாட்டைதான், இந்த ஒட்டுமொத்த மாற்றத்துக்கும் காரணம்’’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.

தி.மு.க-வின் எந்த நிகழ்வாக இருந்தாலும் அது அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவது தான் வழக்கம். ஆனால், தென்மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சமீபத்தில் முரசொலி அலுவலகத்தில் நடத்தினார் ஸ்டாலின். அதே போல், முக்கிய தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பை அறிவாலயத்தில் நடத்தாமல், தன் ஆழ்வார்பேட்டை வீட்டில் நடத்திவருகிறார். இதற்குப் பின்னணியில் சொல்லப்பட்ட காரணம், ‘அறிவாலயத்தில் எந்த நிகழ்வு நடைபெற்றாலும் அது உடனடியாக வெளியே கசிந்துவிடுகிறது’ என்பதுதான். இதனால், தன் டிரைவர் பாலுவை அதிரடியாக நீக்கினார் ஸ்டாலின். ஆனால், பாலுவைத் தாண்டிய பலர் அறிவாலய வளாகத்தில் இருக்கிறார்கள்.